கிறிஸ்தவ பின்னணியில் ஒரு தமிழ்ப்பேய் படம்
பொள்ளாச்சி அருகேயுள்ள ஊரில் ஒரு கிறிஸ்தவ அம்மா..அந்த அம்மாவிற்கு இரு பெண் பிள்ளைகள். அந்த அம்மா அடிக்கடி விநோதமான செயல்களில் ஈடுபகிறார். ஒரு கட்டத்தில் அவர் கொடூர கொலைகளையும் செய்கிறார். அவர் ஏன் இப்படிச் செய்கிறார் என்பதற்கான பதிலாக படத்தின் மீதிக்கதையை வைத்துள்ளார் இயக்குநர் மணிகண்டன் ராமலிங்கம்.
ப்ரட்ரிக் என்ற கல்லூரி மாணவனுக்கு படத்தில் நல்ல கேரக்டர். ஓரளவு தன்னை நிரூபித்துள்ளார். ஐரா நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சாந்தினி குறைவான நேரமே வந்தாலும் தனது நல்ல நடிப்பின் மூலம் தனது இருப்பை அழுத்தமாக பதிவு செய்கிறார். அம்மாவாக நடித்துள்ளவர் அசத்தியுள்ளார். இயக்குநரே ஒரு பெரிய ரோலில் நடித்துள்ளார். இன்னும் பெட்டராக அவர் நடித்திருக்கலாம்
பாலா G ராமசாமி ஒளிப்பதிவை கச்சிதமாக செய்துள்ளார். பொள்ளாச்சியின் ஏரியல் ஷாட்கள் மட்டுமல்ல..எல்லா ஏரியாக்களையும் அவரது கேமரா அழகாக காட்டியுள்ளது. அஸ்வின் கிருஷ்ணாவின் இசை சற்று இரைச்சலை வழங்கினாலும் ஒருசில இடங்களில் நல்ல ஸ்கோரிங்-ஐ செய்துள்ளது.
ஒலிப்பதிவும் 5.1 மிக்ஸிங்கும் மிகத்தரமாக அமைந்துள்ளது. டெக்னிக்கல் ஏரியா எல்லாமே அசத்தல் எனலாம்
கதையை இயக்குநர் நாம் மிகவும் டயர்ட் ஆன பிறகே ஆரம்பிக்கிறார். கிட்டத்தட்ட இரண்டுமணி நேரம் நமக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை..அதன்பின் மெதுவாக கதைக்குள் வருகிறார் இயக்குநர். படத்தில் வாவ் எனச்சொல்வதற்கு பெரியளவில் காட்சிகள் இல்லை. மேக்கிங் மட்டுமே படத்தை காப்பாற்றுகிறது
2.75/5
-வெண்பா தமிழ்

