சாவீ- விமர்சனம்

“ஒன் கடை அப்பளத்தைக் காணோம்னு அழலடா..எங்கப்பனை காணோம்னு அழுவுறேன்” என்ற வடிவேலுவின் புகழ்பெற்ற வசனத்தை ஒருமுறை நினைவூட்டிக் கொள்ளுங்கள்.

இனி கதைக்குள் செல்லலாம்

நாயகன் உதயாதீப் தன் தந்தை இறப்பிற்கு காரணமாக இருந்த தன் தாய்மாமாக்கள் மீது பெரும் கோபத்தோடு இருக்கிறார். ஆனாலும் அதிலொரு மாமாவின் மகளை காதலிக்கவும் செய்கிறார். சினிமா தயாரிப்பாளராக இருக்கும் அந்தமாமா திடீரென இறந்துவிடுகிறார். நாயகி சோகத்திலிருக்க, ஹீரோ அலட்டிக்கொள்ளாமல் இருக்கிறார். இரவில் சடலத்தின் காவலுக்கு இருவர் மட்டுமே இருக்க, சடலம் காணாமல் போகிறது. இறந்தவரை கடத்தியது யார்.. ஏன்? என்ற கேள்விக்குப் பதில் சொல்கிறது படம்

கதையின் நாயகனாக இருக்க வேண்டிய உதயா தீப் பல காட்சிகளில் கதாநாயகன் போல பில்டப் ஏற்றுகிறார். அது கதைக்குச் சற்று அந்நியமாக தெரிகிறது. ஒருசில காட்சிகளில் சிறப்பான பங்களிப்பால் சிரிப்பையும் வரவைக்கிறார். ஏனைய கேரக்டர்களில் ஆதேஷ் பாலா, ராட்சசன் யாசர், மாஸ்டர் அஜய், கவிதா சுரேஷ், ப்ரேம் கே சேஷாஸ்த்ரி ஆகியோரும் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளனர்

இசையமைப்பாளர் இன்னும் மெச்சூட்-ஆக பின்னணி இசையை அமைத்திருக்கலாம். காமெடி காட்சிகளில், “டொட்டடேன்” போன்ற இசையைக் கொடுத்து நம்மை பழைய காலத்திற்கு அழைத்துச் செல்கிறார். ஒளிப்பதிவாளர் போதிய பட்ஜெட் கிடைக்காமல் நிறைய காட்சிகளில் லைட்டிங் இல்லாமல் கஷ்டப்பட்டுள்ளார் போல. இருந்தாலும் ஓரளவு சமாளித்துள்ளார்

சில டார்க் காமெடிகள் வொர்க் ஆகியுள்ளது. அது மட்டுமே படத்தைக் கரை சேர்க்கிறது. இன்ட்ரெஸ்டிங்கான ஒன்லைன் பிடித்த இயக்குநர் ஆண்டன் அஜித் அதைவிட இன்ட்ரெஸ்டிங்காக திரைக்கதை அமைத்திருக்கலாம். எல்லாக் கேரக்டர்களையும் மேலோட்டமாக எழுதியிருப்பது சற்று பலவீனம் என்றாலும் சிற்சில மொமெண்ட்ஸ் படத்தை என்கேஜிங்காக வைத்துள்ளது.

சாவு வீடு என்ற டைட்டிலைத் தான் சாவீ ஆக்கியுள்ளனர். ஒரளவு ஜாலி மூட்-ஐ செட் செய்த விதத்தில் சாவீ OK தான்
2.5/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *