ரைட்- விமர்சனம்

காவல் நிலையத்திற்குள் நீதிமன்றம் வந்தால் எப்படி இருக்கும்? ரைட் பதில் சொல்கிறது

நடிகர் அருண்பாண்டியன் தன் மகனை காணவில்லை என காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வருகிறார். சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கல்யாண பத்திரிக்கை கொடுக்க ஸ்டேசன் வருகிறார். மேலும் சில அக்யூஸ்டுகள் அங்கு இருக்கின்றனர். இச்சூழலில் ஸ்டேசனுக்குள் பாம் வைத்திருப்பதாக ஒரு தகவல் வந்து பெரும் பீதியைக் கிளப்புகிறது. போலீஸ்டேசனுக்குள் பாம் வைத்தவர் யார்.. அருண்பாண்டியன் மகன் யாரால் கடத்தப்பட்டார் என்பதற்கான விடையை படத்தின் மீதிக்கதை சொல்கிறது

இன்ஸ்பெக்டராக நட்டி கெட்டியான நடிப்பைக் கொடுத்துள்ளார். முதலில் அவருக்கான வெளி குறைவாகத் தான் இருந்தது. பின்பாதியில் அவர் கேரக்டர் கனம் பெற்றுவிட்டது. குறிப்பாக க்ளைமாக்ஸில் அசத்தி விட்டார் நட்டி. அருண்பாண்டியன் செயற்கையாக நடித்தாலும் சில இடங்களில் ஒகே. மூணாறு ரமேஷ் நன்றாக ஸ்கோர் செய்துள்ளார். அக்சரா ரெட்டி, வினோதினி ஆகியோர் கச்சிதமான தேர்வு. யுவினா சின்ன ரோலில் வந்தாலும் கவனிக்க வைக்கிறார்

குணா சுப்பிரமணியன் இசையில் நல்ல பாசிட்டிவ் வைப். ஒளிப்பதிவாளர் பத்மேஷ் மார்தாண்டன் கிடைத்த லைட்டிங்கில் நல்ல நல்ல ப்ரேம்கள் வைத்துள்ளார்.

மிக வித்தியாசமான ஒன்லைனை வைத்து படத்தின் ஆரம்பத்தை சுவாரஸ்யப்படுத்திய இயக்குநர் சுப்ரமணியன், படத்தை அப்படியே நகர்த்த தவறியுள்ளார். இன்னும் சற்று மெனக்கெட்டிருந்தால் ரைட் மாஸ் செய்திருக்கும். நிறைய விசயங்களை போட்டு அடுக்கியதால் எமோஷ்னல் ஸ்பிலிட் ஆகியுள்ளது. இருந்தாலும் கதையாக நிச்சயம் ரைட் நல்ல முயற்சியே
2.75/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *