வால்மீகியின் ராமாயண கனியை தோல் சீவி சுவைக்கத் தந்துள்ளார் இயக்குநர் நிதேஷ் திவாரி
ராமாயணத்தின் கதை என்ன என்பது அனைவருக்கும் தெரியும் என்பதால் கதையை டீடெய்லாக சொல்லத்தேவையில்லை. பெருங்காவியமான ராமாயணத்தின் முக்கிய அம்சங்களை மட்டும் முதல் பாகத்தில் தொகுத்துள்ளனர்.
1: ராவணனின் வம்சம் என்ன? அவனின் பின்புலம் என்ன? அவனின் தன்பலம் என்ன? என்பதை படத்தின் ஆரம்பத்திலே மிக வலுவாக கட்டமைத்துள்ளார் இயக்குநர்
2: ராமனின் பிறப்பு, அறம் சார்ந்த அவனின் வளர்ப்பு, சீதையை அவர் அடைவதற்கான அழகான சூழல் ஆகியவற்றை விளக்கும் காட்சிகளும் சூப்பர்
3: ராமன் தாடகையை வதம் செய்யும் காட்சி, அதன்பின் ராமன் சீதை லெட்சுமணன் வனவாசம் செல்லும் காட்சி பிரமாதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது
4: சீதையை ராவணன் கவர்ந்து செல்லும் காட்சி சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. ஜடாயு பறவை மற்றும் ராவணனின் போர் முடியும் போது இந்தப்பாகம் நிறைவெய்துவிடுகிறது
ராமாயண காவிய நாயகன் ராமனாக ரன்வீர் கபூர் இயல்பான நடிப்பால் கவர்கிறார். அறம் தாங்கி நிற்கும் புனிதராக அசத்துகிறார். சாய் பல்லவி சீதைப் பாத்திரத்தில் சிறப்பு செய்துள்ளார். யாஷ் ராவணன் கேரக்டரில் பின்னியெடுத்துள்ளார்.
இந்தப்படத்தின் நிஜ நாயகனாக ஏ.ஆர் ரஹ்மான் இருக்கிறார். ராமன் வனவாசம் செல்லும் காட்சியில் அவர் வாசித்திருக்கும் இசை அற்புதம். ஒளிப்பதிவாளர் அசுரப்பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார். CG மற்றும் 3D தொழில்நுட்பம் அசத்தலாக வாய்த்துள்ளது. விஷுவலாக பெரும் பாய்ச்சலை நிகழ்த்திய படக்குழு அனைவருக்கும் வாழ்த்துகள்
வால்மீகி எழுதிய ராமாயணத்தை மூலமாக முன்வைத்து இந்தப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர். எதுவெல்லாம் தியேட்டரிகலாக வொர்க்கவுட் ஆகுமோ அவற்றையெல்லாம் திரைக்கதையில் கொண்டு வந்துள்ளனர். ராமனின் என்ட்ரி, ராவணனின் என்ட்ரி இரண்டுமே மாஸ்! சூர்ப்பணகை ராவணனை பிரைன்வாஷ் செய்யும் காட்சியை இன்னும் வலிமைப்படுத்தி இருக்கலாம்! ராமன் ஏன் காட்டுக்குச் செல்லவேண்டும் என்ற காரணத்தை படத்தில் கன்வே செய்யவில்லை. ஒருவேளை வால்மீகியும் எழுதாமல் விட்டிருக்கலாம். ஆனால் நம் கம்பன் எழுதியிருப்பார்!
கம்பராமாயணத்தை மூலமாக வைத்து திரைக்கதை எழுதியிருந்தால் இன்னும் பல அற்புதங்கள் நமக்கு கிடைத்திருக்கும்
இருந்தும் நிச்சயமாக குடும்பத்தோடுச் சென்று பார்க்கலாம். அத்தனை துல்லியமான படமாக வந்துள்ளது ராமாயணம்!
3.75/5
-தமிழ் வெண்பா

