“மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல..அதையும் தாண்டி வேற ஒன்னு” யெஸ் நம்ம உலக மனிதருக்கும், வேற்று உலக ஏலியனுக்கும் நடக்கும் காதல் இது
நாயகன் ரியோ காதலிக்க ஆள் கிடைக்காமல் லோ லோ என அலைகிறார். அவருக்கு நண்பனாக வரும் இளைஞர் “மச்சி மெட்ரோ ட்ரைன்ல பொண்ணு தேடாம நார்மல் ட்ரைன்ல பொண்ணு தேடு” என்கிறார். ரியோவும் நார்மல் ட்ரைனில் நாயகி வர்ட்டிகாவைச் சந்திக்கிறார். இருவரும் காதலிக்கிறார்கள். காதலியான வர்ட்டிகா போடும் ஒரே கண்டிசன் மாலை 6 மணிக்குப் பிறகு என்னை தொடர்பு கொள்ளக்கூடாது என்பது தான். ஏன்? என்ற கேள்விக்கு ஒரு எசகுபிசகான கதை சொல்கிறார் நாயகி. யெஸ் ஏழுமணிக்குப் பின் நாயகி ஆணாக மாறிவிடுவார். அவர்களின் ஏலியன் உலக வழக்கம் என்பது பகலில் ஆண் இரவில் பெண் என்பதே. இப்ப ஹீரோவிடம் நண்பராக வந்து ஐடியா கொடுத்த இளைஞரும் நாயகியும் ஒரே ஆள் தான் என்பது தெரியவருகிறது. அப்புறம் இந்தக் களேபரத்தின் முடிவு என்ன? என்பதை காமெடியாக சொல்ல முயற்சித்துள்ளனர்
நாயகனாக ரியோ எதார்த்தமாக நடித்திருந்தாலும் சில இடங்களில் பிசிறு தட்டுகிறது. குறிப்பாக அவர் ஆடியன்ஸைப் பார்த்து டயலாக் பேசுவதை தவிர்த்திருக்கலாம். நாயகி அழகோடு சேர்த்து நடிப்பிலும் பாஸ்மார்க் வாங்குகிறார். எமோஷ்னல் காட்சிகளில் கூடுதல் கவனம் தேவை. ரியோவின் நண்பர், சேத்தன், முனிஷ்காந்த், தீபா வெங்கட் என பல கேரக்டர்கள் ஓரளவு கவனம் ஈர்க்கிறார்கள்
இசையமைப்பாளர் அங்கிட் மெனென் இன்னும் சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கலாம். மல்லைகார்ஜுன் நல்ல விஷுவலை கொடுத்துள்ளார்.
படத்தின் ஒன்லைன் ஒரு கொரியன் சீரிஸை நினைவுப்படுத்துகிறது. சமீபத்தில் வெளியான டபுள் ஆக்குபன்ஸி படத்தின் லைனையும் படம் நினைவூட்டியது. நல்ல ஐடியாவை இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் ரைட்டிங்கில் வைத்துள்ளார். ஆனால் அவற்றை காட்சிப்படுத்துகையில் எதார்த்தம் கூடவில்லை. நிறைய காட்சிகள் ப்ளாஸ்டிக்காகவே இருந்தன. பின்பாதியில் முனிஷ்காந்த் வந்தபின் படம் Take of ஆகிறது. க்ளைமாக்ஸ் ஒரளவு திருப்தி படுத்துவதால் Onetime watchable கேட்டகிரியில் இப்படத்தை வைக்கலாம்
3/5

