போட்டோகிராபர்- விமர்சனம்

ஒரு கேமரா காதலனின் திரில்லிங் பயணம்

நிறைவான தொழில், அழகான காதலி, அன்பான நண்பர்கள் என எல்லாம் சேட்டிஸ்பைடாக இருந்தும், தன் போட்டோகிராபி காதலால் கேமராவோடு கொடைக்கானல் செல்கிறார் ஹீரோ அஷ்ரஃப். கொடைக்கானலிலுள்ள மதிகெட்டான் சோலைக்குள் தங்கமரம் இருப்பதாக நம்பப்படுகிறது. அதை நம்பி அந்த மதிகெட்டான் சோலைக்குள் செல்கிறார் நாயகன் அஷ்ரஃப். அதன்பிறகு அவருக்குப் பல்வேறு சர்வைவல் சிக்கல் நேர்கிறது. காடு தாண்டி அவர் வீடு வந்து சேர்ந்தாரா என்பதே படத்தின் கதை

அஷ்ரஃப் ஹீரோவாக நல்ல முயற்சியெடுத்து நடித்துள்ளார். எமோஷ்னல் காட்சிகளில் கூடுதல் கவனம் தேவை. ஜனனி சமாதானம் நல்ல நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அவருக்கான ஸ்கிரீன் பேஸ் கம்மியாகவே இருக்கிறது. கருணாகரன் கதையில் திருப்புமுனை ஏற்படுத்தும் கேரக்டரில் நடித்துள்ளார். உரியடி சிவா, ஆடுகளம் நரேன், தேவி மகேஷ், வேல.ராமமூர்த்தி உள்பட பலரும் ஒகேவாக நடித்துள்ளனர்.

கேமராமேன் அயீஸ் அஹ்மத் அசுர உழைப்பைக் கொடுத்துள்ளார். கொடைக்கானல் மலைப்பகுதி ஆல்ரெடி அழகு என்றாலும் அவற்றைப் பேரழகோடு காட்டியிருக்கிறார். இசையமைப்பாளர் ராஜ்குமார் சந்திரசேகரன் இன்ட்ரெஸ்டிங்கான இசையைக் கொடுத்துள்ளார்.

இயக்குநராக அஷ்ரஃப் ஓரளவு நல்ல மேக்கிங் தான் கொடுத்துள்ளார். இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் மெனக்கெட்டிருக்கலாம். இஸ்லாமியராக இருந்தாலும், இந்துமத நம்பிக்கைகளை முன்னிறுத்தி படத்தை நகர்த்தியுள்ள அவரது சமூகநீதி உள்ளம் பாராட்டத்தக்கது. திரில்லரை கூட்டி விறுவிறுப்பை ஏற்றியிருந்தால் போட்டோகிராபர் இன்னும் லைக்ஸை அள்ளியிருப்பார்
3/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *