வெறும் ஒரு வசனத்தை வைத்து முழு கதையையும் புரிய வைக்க முடியுமா? அப்படி புரிய வைத்தபடம் படையப்பா “அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும்.. அதிகமா கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல” என்ற வசனம் தான் அது
26 ஆண்டுகள் கழித்து ரி ரிலீஸ் ஆகும் படையப்பாவிற்கு இன்று நாடே சிகப்பு கம்பளம் விரித்துள்ளது..அதன் காரணம் ரஜினியின் கரிஷ்மாட்டிக்
படையப்பா படத்தின் கதை நாட்டுக்கே தெரியும் என்பதால் கதையை விட்டுவிடலாம். படம் என்ன அனுபவத்தை கொடுக்கிறது என்று பார்க்கலாம்
படத்தில் ரஜினியின் ஓப்பனிங் சாங் வரும்போதே நமக்குள் ஒரு பாசிட்டிவ் வைப் பற்றிக்கொள்கிறது. அதன்பிறகு செந்தில் காமெடி, ரம்யா கிருஷ்ணன் வருகை, செளந்தர்யா அழகு, சிவாஜியின் கம்பீர நடிப்பு, மணிவண்ணனின் வில்லத்தனம், நாசரின் கடுமை, லெட்சுமியின் மாஸ் காட்சி என படத்தில் தோன்றிய அத்தனை கேரக்டர்களும் வேறலெவல் ரகம்
படையப்பாவின் பெரும் படைகளில் முன்னணிப் படை இசை தான். கூடுதலாக கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளும் இசைக்கு பேரழகு சேர்த்திருக்கும். ஒளிப்பதிவு அன்றைய நாளில் மட்டுமல்ல..இன்றும் தனிப்பதிவாகவே தெரிகிறது. கே.எஸ் ரவிக்குமாரின் மாஸ்டர் பீஸான படையப்பாவை மீண்டும் கொண்டாடுவதின் மூலம், 50 ஆண்டுகால சினிமாவை தனக்குள் வைத்திருக்கும் நம் சூப்பர் ஸ்டாருக்கு பெரு மரியாதை செய்ய முடியும்
-வெண்பா தமிழ்

