ஒரு காதல், குடும்பம் சார்ந்த கதையில் திரில்லர் மீட்டரையும் ஏற்றியிருக்கிறார் இயக்குநர் விஜய் ரங்கநாதன்
அதுல் தன் மனைவியான நிவேதிதாவோடு கொடைக்கானல் செல்கிறார். அதுலுக்கு பிஸ்னெஸ் செட் ஆகவில்லை என்ற கவலை. மனைவி நிவேதிதாவிற்கு தன் பழைய காதலை கணவனிடம் சொல்லலாமா என்ற குழப்பம். இச்சூழலில் அவரின் முன்னாள் காதலனை அதுலே வீட்டிற்கு அழைத்து வருகிறார். நிவேதிதா அதிர்ச்சியாகிறார். அதன்பின் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை
கதையின் நாயகன்கள் என அதுல் மற்றும் சிபி சந்திரனைச் சொல்லமுடியும். வெகு இயல்பாக நடித்துள்ளார்கள். சிபி சந்திரனுக்கு ஏனோ தானோ கேரக்டர் வார்ப்பு. அது அவரது பாடிலாங்குவேஜுக்கு செம்மயாக செட் ஆகிறது. நிவேதிதாவும் சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளார். நாசர் கொடுத்த வேலையை வழக்கம் போல் கச்சிதமாக முடித்துள்ளார்.
வைசாக் சோமநாத் பின்னணி இசையில் திரைக்கதைக்கு நல்ல மைலேஜை கொடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர் வேதராமன் சங்கரன் அருமையான ஷாட்களை கம்போஸ் செய்துள்ளார். கேமரா கோணங்களே திரில்லர் எபெக்டை கொடுப்பது ஒரு பாசிட்டிவ் நோட் எனலாம்
மெல்லிதாக கத்திமேல் பயணப்படும் கதையை தனது தேர்ந்த திரைக்கதையால் சரி செய்கிறார் இயக்குநர் விஜய் ரங்கநாதன். சில காட்சிகளை அவர் அழகாக ஸ்டேஜிங் செய்ததும் ஆகச்சிறப்பு. படத்தின் துவக்கத்தில் ஒரு கொலையைக் காட்டிவிட்டு அதன்பின் கதையை நகர்த்தியது நல்ல உத்தி. படத்தின் தலைப்பிற்கு ஏற்றாப்போல வணத்துப்பூச்சி குறியீட்டையும் படத்தில் வைத்துள்ளனர். இன்னும் ஆகச்சிறப்பான விசயங்களைப் படத்தில் சேர்த்திருக்கலாம். ஓகோ எனச்சொல்லும் படியாக இல்லாவிட்டாலும், நிச்சயமாக ஒகே சொல்லலாம்
3.25/5
-வெண்பா தமிழ்

