அப்பாவி மக்களுக்கு எதிராக அதிகாரம் நடத்தும் வேட்டையே இந்த நரிவேட்டை
நாயகன் டொவொனோ தாமஸ் படித்து முடித்து பிடித்த வேலைக்காக காத்திருக்கிறார். ஊரில் முளைத்த காதலும், அது தந்த சூழலும் அவரை ரிசர்வ் படைக்கு அனுப்புகிறது. அவருக்கு அங்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. மலைவாழ் மக்கள் நடத்தும் போராட்டத்தை அடக்கச் செல்லும் டொவினோ தாமஸ் அடுத்தடுத்து பெறுவது என்ன என்பதாக கதை நகர்கிறது
கதையின் நாயகனாக டொவினா தாமஸ் முதிர்ச்சியான நடிப்பைக் கொடுத்துள்ளார். சூராஜ் வெஞ்சாரமூடு கதையின் மூட்-க்கு ஏற்ற நடிப்பை வழங்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இன்ப அதிர்ச்சி நமது சேரனின் கேரக்டரும் நடிப்பும். காவல் அதிகாரியாக வரும் சேரனின் கேரக்டர் வார்ப்பும் அவரது நடிப்பும் சிறப்பு. நாயகி பிரியம்வதா கிருஷ்ணன். அவருக்குப் படத்தில் பெரிதாக வேலையில்லை
மலை சார்ந்த நிலப்பரப்பை மிகச்சிறப்பாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். பின்னணி இசை கதைக்குத் தேவையான அழுத்தத்தைத் தந்துள்ளது
மலைவாழ் மக்களுக்கு எதிராக காவல்துறையும் அதிகாரமும் எப்படி கேம் ஆடுகின்றன என்பதை நல்ல திரைக்கதை வழியாக நச் என்று சொல்லியுள்ளார் இயக்குநர் அனுராஜ் மனோகர். இந்தக் கதையைச் சொல்வதற்காக அவர் அமைத்துள்ள திரைக்கதை உத்தி அபாரம்
படத்தின் இறுதிக்காட்சியில், “ஆடு நனைய ஓநாய் அழுமா?” என்ற கேள்வி நமக்கு எழுகிறது. அதுவொரு சின்ன மைனஸ்
மற்றபடி ஓரளவு நல்ல வேட்டையை நடத்தியுள்ளது இந்த நரிவேட்டை
3/5
-வெண்பா தமிழ்

