நாயகன்- திரை அனுபவம்

38 ஆண்டுகளாக ஒருபடம் இளமையாகவே இருக்கிறது என்றால், அர்ப்பணிப்பு மிக்க கலைஞர்கள் அந்தப் படத்தோடு ஒன்றுற கலந்துள்ளனர் என பொருள்

இன்று சென்னை கமலா திரையரங்கில் நாயகன் பார்த்தேன். பிசிறு தட்டாத திரைமொழி. சொந்த மண்ணில் வீழ்த்தப்பட்டவன் வாழ வந்த மண்ணில் விளிம்பு நிலை மக்களுக்காக நாயகனாக எழுந்து நிற்கிறார். அறம் பிறழாத அந்த க்ளைமாக்ஸ் காட்சி நெகிழ வைத்தது. வேலு நாயக்கர் முப்பது வயதில், 40 வயதில், 60-க்கு மேலுள்ள வயதில் என எல்லா காலங்களிலும் கவனம் ஈர்க்கிறார். வேலு நாயக்கராக உருமாற கமல் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. வேலு நாயக்கரை அவர் அணிந்துகொள்ளமால, புகுத்திக் கொண்டதால் ஏற்பட்ட விளைவு இது. எல்லாக் காட்சிகளிலும் ஆச்சர்யம் தருகிறார் நாயகன்.

தென்பாண்டிச் சீமையிலே பி.ஜி.எம் ஒலிக்கும் போதெல்லாம் ஒரு கணம் நெஞ்சு நிறைந்து விழுகிறது. படத்தின் ஒளிப்பதிவில் இப்போதும் பாடம் படிக்க முடியும்.

மணிரத்னம் சாரிடம் எப்போதும் படித்துக்கொள்ள ஒரு பாடம் இருக்கும். நாயகனில் நிறைய உள்ளது. இளம் தலைமுறை படைப்பாளிகளும், ஜென்ஸி கிட்ஸும் தவற விடாதீர்கள். படம் தியேட்டர்களில் சிறப்பாக ஓடுகிறது

ஒரு திரைப்படத்திற்கு எப்படி வசனம் அமையவேண்டும் என்பதையும், அப்படி சிறப்பாக அமையும் வசனங்கள் காட்சிகளை எவ்வளவு கூர்மை படுத்தும் என்பதையும் பாலகுமாரன் அய்யா திரைவழி நிறுவியுள்ளார்..

பேரனுபவம் மகிழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *