ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே- விமர்சனம்

‘ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விஜய் ஒரு விஜி’ என்ற டயலாக் நம்ம முதல்வர் விஜய்க்கு எப்படி பொருந்தியதோ அதேயளவு இந்த ஸ்பைடர் மேனுக்கும் பொருந்தும்..ஏனென்றால் உலகில் ஸ்பைடர் மேன்-ஐ இன்ஸ்பையராக பார்க்காத குட்டிஸே இல்லை எனலாம்..அப்படியான ட்பைடர் மேன் மீண்டும் திரையில் வந்துள்ளார். எப்படி இருக்கு படம்?

தன்னை நினைவில் கொள்ளாத ஒரு உலகில் அந்த உலகிற்காக போராடுகிறார் ஸ்பைடர் மேன். அதேநேரம் தன்னைத் தாண்டிச் செல்லும் தனது நண்பர்களின் வாழ்வை எண்ணி அகச்சோர்வு கொள்கிறார்..ஆனால் அப்படியான எண்ணமே அவர் வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வருகிறது..அதன் விளைவுகளை மீதிப்ப டம் பேசுகிறது

டாம் ஹாலண்ட் ஜெண்டயா, ஜேக்கப் படலான், ஜான் பெர்ன்தால், சேடி சிங்க், மார்க் ரஃபலோ உள்ளிட்ட பிறநடிகர்கள் யாவரும் நன்றாக ஸ்கோர் செய்துள்ளனர்

பிரெட் பாவ்லக்-ன் கேமரா நம் கண்களுக்கு பல ஆச்சர்யங்களை அளிக்கிறது. ஸ்பைடர்மேனின் சாகசங்களில் கேமராமேன் டீம் அசுர உழைப்பைப் போட்டுள்ளது. மைக்கேல் ஜியாக்கினோ இசையில் கம்பீரம் ஜொலிக்கிறது

ஸ்பைடர் மேன் என்றாலே வேகம் தான். ஆனால் இதில் வேகம் சின்னதாக மட்டுப்பட்டுள்ளது. இருப்பினும் எமோஷ்னல் எண்டெர்டெயின்மெண்ட் கலந்து இருப்பதால் நிச்சயமாக இந்த வார இறுதியைப் ஸ்பைடர் மேனுக்கு கொடுக்கலாம்
3.25/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *