மீஷா- விமர்சனம்

கேரளத்தின் வனத்துக்குள் நடக்கும் ஒரு அரசியல் வேட்டை

வனத்துறை காவலராக இருக்கும் கதிர் இல்லீகலாக மான் கறி சாப்பிட தன் நண்பர்கள் இருவரை அழைக்கிறார். அந்த இருவரில் ஒரு நண்பர் ஹக்கீம் ஷா ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர். கதிர் காலணியைச் சேர்ந்தவர். இந்த இருவரின் நட்புக்கும் ஒரு பின்கதை இருக்கிறது. அந்தக் கதையில் ஒரு அரசியலும் இருக்கிறது. ஒரு அரசியல் வாதி ஹக்கீம் ஷாவை வைத்தே கதிரை தீர்த்துக்கட்ட நினைக்கிறார். அந்த அரசியலால் கதிர் பாதிக்கப்படுகிறார். பின் மீண்டெழுகிறார். திரும்பவும் ஆதிக்கம் அவரைச் சீண்ட, நட்பின் துணை கதிரை காப்பாற்றியதா.. வீழ்த்தியதா என்பதே மீஷாவின் மீதிக்கதை

சின்னதாக நெகட்டிவ் ஸேட் தெரியும்படி முதலில் தோன்றி பின் Full பாசிட்டிவாக நடித்துள்ள கதிர் மலையாளத்தில் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்துள்ளார். ஹக்கீம் ஷா மிகச்சிறப்பாக நடித்துள்ளார். வசனமில்லாமல் முகத்தில் அவர் காட்டியுள்ள பெர்பாமன்ஸ் ஆகத்தரம். மற்றொரு நண்பராக வரும் சுதி கன கச்சிதம். ரகு என்ற பெயரில் வரும் அரசியல் வாதியும் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார்

சுரேஷ் ராஜன் தனது கேமராவால் கேரள வனத்தின் மொத்த அழகையும் அள்ளிக்கொண்டு வந்துள்ளார். CG காட்சிகள் சின்னதாக பிசிர் தட்டுகிறது.
சூரஜ் எஸ்.குருப் தனது தரமான இசையை வழங்கியுள்ளார். பாடல்களும் சிறப்பாக வந்துள்ளது

அரசியல் வாதியின் சதி நல்ல நட்பிற்குள்ளும் விசத்தை விதைக்கும் என படம் சொல்கிறது. அதற்கான காட்சிப் பின்னல்கள் இன்னும் வலிமையாக இருந்திருக்கலாம். வசனங்களில் இருக்கும் அழுத்தம் திரைக்கதையில் இல்லை. மனிதர்களைப் பிரித்து வைத்துவிட்டு எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று சொன்னால் தான் அரசியல் செய்ய முடியும் என்ற கொடூர நிஜத்தைப் பேசியபடம் மனதில் ஆழமாக பதியவில்லை என்பது தான் சோகம்.

திரில்லர் விரும்பிகள் ஒருமுறை ட்ரைப் பண்ணலாம்
2.75/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *