” மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்”என்றார் எழுத்தாளர் ஜி.நாகராஜன். அதை வாழ்வில் பல தருணங்களில் நாம் உணர்ந்திருப்போம். அப்படியொரு தருணத்தை இந்தப்படமும் விளக்குகிறது.
திண்டுக்கல் அருகே நடக்கும் திருவிழா ஒன்றில் ஆறு நண்பர்கள் அமர்ந்து குடிக்கிறார்கள். மது உள்ளே போனால் மனசாட்சி வெளியே போய்விடும் என்பதற்கு சாட்சியாக, குடித்த பின் நண்பர்களுக்குள் சண்டை வருகிறது. அதில் ஒருவர் கொல்லப்படுகிறார். மீதமிருப்பவர்கள் அந்தக் கொலையை மறைக்கிறார்கள். அதன்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மனிதர்களின் கதை
இந்தப் படத்தின் பிரதான பாசிட்டிவ் அம்சமே நடிகர்களின் கச்சிதமான தேர்வும், அவர்கள் தம் எதார்த்தமான நடிப்பும் தான். நாயகன் கபில் வேலவன் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். குணவந்தன், அர்ஜுன் தேவ் சரவணன்,தக்ஷா, சாம்பசிவம் உள்ளிட்ட திரையில் வரும் அனைவரும் அந்தந்த கேரக்டர்களாகவே மாறியுள்ளனர்.
படத்தின் பாடல்கள் கதையிலும் படத்திலும் பெரிதாக சோபிக்கவில்லை. அதே நேரம் பின்னணி இசை துளியும் நம்மைச் சோதிக்கவில்லை. ஒளிப்பதிவு காட்சிகளின் அடர்த்தியைக் கச்சிதமாக காட்டியுள்ளது
நல்லதொரு திரில்லர் ஐடியாவைக் கொண்டு படத்தை நகர்த்தியுள்ளார் இயக்குநர் ராம் இந்திரா. சின்னச் சின்ன சீக்வென்ஸில் இருக்கும் இன்ட்ரெஸ்டிங் படம் முழுதுவம் மிஸ்ஸிங். ஒருபடம் முழுமையாக எண்டர்டெய்ன்மெண்ட் செய்தால் மட்டுமே ரசிகர்களால் முழுமையாக அங்கீகரிக்கப்படும். அந்த வகையில் மனிதர்கள் பாதிக்கிணற்றைத் தான் தாண்டியுள்ளனர். நல்ல முயற்சி என்றளவில் மட்டுமே பாராட்டலாம்
2.75/5
-வெண்பா தமிழ்

