ஜான்டோ- விமர்சனம்

ராட்சசன் பட ரேஞ்சில் ஒரு திரைக்கதையை முயற்சித்துள்ளனர்

ஒரு குடும்பத்திலுள்ள ‘சந்து பல்’ கொண்ட சிறுவன் காணாமல் போகிறான். குடும்பம் பதறுகிறது. காவல்துறையும் தேடுகிறது. அடுத்ததாக அப்பாவால் நெகட்டிவாக பார்க்கப்படும் போலீஸ் ஹீரோ அர்ஜுன் தாஸ் ஒரு கேஸை விசாரித்து வருகிறார். காணாமல் போன சிறுவன் கேஸுக்கும் அர்ஜுன் தாஸ் விசாரிக்கும் கேஸுக்கும் ஒரு லிங் இருப்பதாக படுகிறது. ஒரேபோல் அடையாளம் கொண்ட 17 சிறுவர்கள் காணாமல் போனதால் ஏற்படும் அக நெருக்கடி ஹீரோவை மட்டுமின்றி நம்மையும் பதற்றப்பட வைக்கிறது. க்ளைமாக்ஸ் என்ன? என்பதை நோக்கி சீறிப்பாய்கிறது திரைக்கதை

அர்ஜுன் தாஸ் தான் ஏற்றுக்கொண்ட கேரக்டருக்கு 100% நியாயம் சேர்ப்பவர். இந்தப்படத்திலும் அதைச்செய்துள்ளார்.. சஞ்சனா நடராஜன் பொருத்தமான நடிப்பை கொடுத்து கதைக்கு நெருக்கமாக இருக்கிறார். ஜாரா வினீத் சந்தோக், ஸ்ரிஷ்டி Y, நீரவ் S, அனுபமா குமார், அர்ச்சனா சந்தோக், கார்த்திக் குமார், படவா கோபி ஆகியோரின் நடிப்பும் படத்திற்கு பாசிட்டிவாக அமைந்துள்ளது

இசையில் முஜீப் மஜீத் மற்றும் தி ஆர்டிஸ்ட் 404 டீம் நல்ல வேலை செய்துள்ளனர். ஒரு திரில்லருக்கான பின்னணி பணியைச் சரியாகச் செய்துள்ளனர். ஒளிப்பதிவாளர் ப்ரீத்தா ஜெயராமன் மிரட்டியுள்ளார். படமெங்கும் ஒளிப்பதிவு தனித்துத் தெரிகிறது

மிக வித்தியாசமான மேக்கிங்கில் அட சொல்ல வைக்கிறார் இயக்குநர் மதுமிதா. ரொம்ப இயல்பாக துவங்கும் கதை படிப்படியாக வேகமெடுக்கிறது. இன்டர்வெல் எல்லாம் பக்கா தியேட்டரிக்கல் சம்பவம். இடைவேளைக்குப் பின்னும் திரைக்கதையின் ஓட்டம் சூப்பர் தான். ஆனால் க்ளைமாக்ஸ் மிகவும் அந்நியமாக (அந்நியனாக) மாறி நம்மை சங்கடப்படுத்துகிறது. ஒரு படத்திற்கு க்ளைமாக்ஸ் என்பது படத்தின் ஆன்மா! அந்த விசயத்தில் ஏன் கோட்டைவிட்டார்கள் என தெரியவில்லை. ஆனாலும் வித்தியமாசன கதை சொல்லல், மிரட்டலான மேக்கிங், அசத்தலான ஆக்டிங் ஆகியவற்றுக்காக நிச்சயம் தியேட்டரில் சென்று பார்க்கலாம்
3.25/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *