இக்ஷ்வாகு குலத்தோன்றல்- நூல் விமர்சனம்

அமீஷின் சிவா முத்தொகுதிகள் கொடுத்த தாக்கம் ரொம்ப பெரியது. அதை மனதில் வைத்தே இக்ஷ்வாகு குலத்தோன்றலை அணுகினேன்! ராமனை கம்பன் மிகப்பெரிய ஹீரோவாக காண்பித்திருப்பார். அதில் அட்டகாசமான காரணங்களையும் கோர்த்திருப்பார் கம்பன். கம்பன் வால்மீகியை அடியொற்றியது போலவே கம்பனை அடியொற்றி இந்த நூலை எழுதியுள்ளார் அமீஷ்! கம்பனை அடியொற்றி என்றால் கவிதைகளை அல்ல..கம்பனின் கருத்துக்களை! மற்றபடி இது மிகச்சிறந்த உரைநடை நூல். பவித்ரா ஸ்ரீனிவாசன் தமிழில் அழகாகவும் ஆழமாகவும் மொழி பெயர்த்துள்ளார்

“ராமன் பிறந்த நேரம் கெடுவிதி கொண்டது. அதனால் தான் ராவணனிடம் நடந்த சண்டையில் நான் தோற்றேன்” என்பது தசரதரின் நம்பிக்கை. அதனால் ஆரம்பத்தில் தசரதருக்கு ராமன் மீது பிடித்தமில்லை. ராவணனுடன் நடந்த போரில் தசரதரை உயிரோடு மீட்டு வந்தவள் கைகேயி. அதனால் தசரதர் கைகேயிக்கு கடமைப்பட்டவராக இருக்கிறார். சமயம் பார்த்து ராமனை காட்டுக்கு அனுப்பவும், பரதனை நாடாள வைக்கவும் திட்டம் தீட்டுகிறாள் கைகேயி. இந்தத் திட்டம் நிறைவேறும் காலம் வரும்போது தசரதருக்கு ராமன் மீது பேரன்பு வந்துவிடுகிறது.
ஆனால் விதி வேறு விதமாக செயல்படுகிறது. அதன்பின் எல்லோருக்கும் தெரிந்த கதை தான். ராமன், சீதை, லட்சுமணன் காடேகுகிறார்கள். சீதை கடத்தப்படுகிறாள். இத்தோடு முதல் பாகத்தை முடிக்கிறார் அமீஷ்

இந்த நூலில் பரதனுக்கும் ராமனுக்குமான ஆரம்பக்கட்ட உரையாடல் சிறப்பாகவும் ஜாலியாகவும் இருந்தது. பரதனை ஒரு லவ்வர் பாயாக வார்த்துள்ளார் அமீஷ். அது செம்ம இன்ட்ரெஸ்டிங்காக இருந்தது😍

எல்லாக் காட்சிகளிலும் ராமனின் அறம் முன் நிறுத்தப்படுவது நிச்சயமாக வாழ்வியல் பாடம்!

சூப்பர் ரைட்டிங்..சூப்பர் நரேட்டிங்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *