Who is killer? இதான் ஒன்லைன்
இன்ஸ்பெக்டரான ஹீரோ வசந்த் ரவி மொடாக்குடிகாரர். குடியால் அவருக்கு கண்பார்வை பறிபோகிறது. மேலும் சிட்டியில் சுனில் பல கொலைகளை தொடர்ச்சியாக செய்கிறார். இச்சூழலில் வசந்த் ரவியின் மனைவி கொல்லப்படுகிறார். ஆனால் அவரைக் கொன்றது சீரியல் கில்லரான சுனில் இல்லை. பின் யார்? இதான் படத்தின் அவுட்லைன்
பார்வையற்றவராக வசந்த் ரவி சிறப்பாக நடித்துள்ளார். சில எமோஷ்னல் காட்சிகளில் இன்னும் அதிகமாக ஸ்கோர் செய்திருக்கலாம். மேக்ரீன் ப்ரிஷடா, அனிகா சுரேந்திரன் இருவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கேரக்டரை பூர்த்தி செய்துள்ளனர். கல்யாண், ராஜ்குமார் ஆகியோர் நடிப்பிலும் நல்ல நேர்த்தி. சுனில் காட்டும் முரட்டு வில்லத்தனம் பஃவர்புல்-ஆக அமைந்துள்ளது
அஜ்மல் தாசீன் இசையில் இரைச்சல் சற்று அதிகம் என்றாலும் ப்ளாஸ்பேக் காட்சிகளில் நன்றாக ஸ்கோர் செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் படத்திற்கு தேவையான விஷுவல்ஸை கொடுத்துள்ளார்
கதை நாம் பழக்கப்பட்ட ஒன்றென்றாலும் அதை திரைக்கதையாக சுவாரஸ்யமாகவே எழுதியுள்ளார் இயக்குநர் சபரிஷ் நந்தா. ஆனால் படத்தின் உருவாக்கத்திலும் நடிகர்களின் பங்களிப்பிலும் போதிய எமோஷ்னல் நமக்கு கடத்தப்படவில்லை. படம் ஒரே நேர்கோட்டில் பயணித்தாலும் ஆடியன்ஸை கன்பியூஸ் செய்ய வேண்டும் என்ற நோக்கம் வெளிப்படையாக தெரிவது மைனஸ்.
மிகச்சிறந்த மர்டர் மிஸ்ட்ரி படமாக வர வேண்டிய படத்தை ஜஸ்ட் லைக் தட் ஆக டீல் செய்திருப்பதால் ஒகே படமாக வந்துள்ளது
திரில்லர் விரும்பிகளுக்கு Onetime watchable Movie-ஆக இருக்கும் இந்த இந்திரா
2.75/5
– வெண்பா தழிழ்

