“காதல் எப்போதுமே ட்ரெண்ட்.. அதற்கு ஏது சார் என்ட்” எனச் சொல்ல வைக்கும் விதமாக ஒரு காதல் ட்ராவல் தான் இந்த ஹார்ட்டிலே பேட்டரி
அதென்ன டைட்டில்.. ஹார்ட்டிலே பேட்டரி?
அதாகப்பட்டது.. உடலிலுள்ள நோயைக் கண்டடைய ஒரு கருவி இருக்கிறது. அதை நாம் நம்புகிறோம். அதேபோல் மனதிலுள்ள காதலின் அளவைக் கண்டுபிடிக்கவும் ஒரு கருவி இருக்கும். இதையும் நம்பணும்!!
So அப்படியான ஒரு கருவியைக கண்டுபிடிக்கிறார் ஹீரோயின் பாடினி குமார். அவரின் அந்த அறிய கண்டுபிடிப்புகளால் இரு சிறிய காதல்கள் புட்டுக்கொள்கின்றன. இச்சூழலில் ஹீரோ குரு லக்ஷ்மன் பாடினிகுமார் மீது லவ்வாகிறார். But பாடினிகுமார் நாட் இன்ட்ரெஸ்டு என்கிறார். ஆனாலும் ஒரு போட்டி வைத்து காதலிக்க ட்ரைப் பண்றார் ஹீரோ. பாடினிகுமார் காதலில் விழுந்தாரா..அவர் கண்டுபிடித்த பேட்டரி அவர் ஹார்ட்டில் உள்ளதைச் சரியாகச் சொன்னதா என்பதே மீதிக்கதை! ஆக டைட்டிலுக்கான விளக்கத்தின் வழியே கதையையும் சொல்லியாச்சு
இந்த வெப்சீரிஸ்ல நடிப்பிலே ரெண்டே பேருக்கு நடுவே தான் போட்டியே.. ஒன்னு GL.. ஒன்னு PK (விஜய் வாய்ஸில் படிக்கவும்) விளையாட்டுக்குச் சொல்லல பாஸ். நிஜமாகவே குரு லக்ஷ்மண் பாடினிகுமார் இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். பர்ஸ்ட் எபிசோடில் இவர்களுக்குள் கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆகுமா என்று தோன்றியது. இரண்டாவது எபிசோடில் வொர்க்கவுட் ஆகும்போலயே எனத் தோன்றியது. மூன்றாவது எபிசோடில்.. ப்பா..வொர்க்கவுட் ஆயிடிச்சு என்று தோன்றியது. Yes They have achieved
கூலி சவுந்தராஜன் ஜாலியாக ஒளிப்பதிவை மேற்கொண்டிருக்கிறார். நிறைய ப்ரேம்களை ரசிக்க முடிந்தது. தன் தொழிலையும் இந்தக் கதையையும் லவ் பண்ணா மட்டும் தான் இப்படி அசத்த முடியும். 2K கிட்ஸின் ரிதமறிந்து இசையை வழங்கியுள்ளார் மைக்கேல் ஆகாஷ். எடிட்டர் நிஜாமும் ஷார்ப்பாக ஷாட்களை கேட்ச் செய்து கட்ஸை மேட்ச் செய்துள்ளார்
இயக்குநர் சதாசிவம் செந்தில்ராஜன் ரைட்டிங்கில் நல்ல மெச்சூட்! சில டயலாக்ஸ்லாம் தரம். குறிப்பாக மனதில் இருப்பதைச் சொல்லும் கருவியை நாம் நம்புவதற்காக கொடுத்த விளக்கம் அல்டிமேட். எமோஷ்னல் ஏரியாவை இன்னும் ஸ்ட்ராங் பண்ணியிருக்கலாம் என்று தோன்றியது.
குட்டி குட்டி மொமெண்ட்ஸை கிரியேட் செய்ததிலே ஜெயித்திருக்கிறார் இயக்குநர்
Zee5 வழங்கியுள்ள இந்த ஹார்ட்டிலே பேட்டரிக்கு நிச்சயமாக ஹார்ட்டீன் விடலாம்!
3/5
-வெண்பா தமிழ்

