காந்தி கண்ணாடி- விமர்சனம்

2016-ல் நடந்த பண மதிப்பிழப்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஒரு எமோஷ்னல் பொங்கல் வைத்திருக்கிறார்கள்

எவெண்ட்ஸ் கம்பெனி நடத்துபவர் ஹீரோ பாலா. அவரிடம் பாலாஜி சக்திவேல் தன் மனைவி அர்ச்சனா ஆசைப்படி 60-ஆம் கல்யாணத்தை நடத்தி வைக்க வேண்டும் என வருகிறார். பாலா அதற்கு ஒரு பெரிய அமோண்ட்-ஐ சொல்கிறார். செக்யூரிட்டி வேலை பார்க்கும் பாலாஜி சக்திவேலிடம் அவ்வளவு பணம் இல்லை என தெரிந்து பாலா டீம் பின் வாங்குகிறார்கள். ஆனால் பாலாஜி சக்திவேல் தானொரு ஜமீன் எனவும் தனக்கு கோயம்புத்தூரில் சொத்து இருக்கிறதெனவும் சொல்கிறார். ஒருவழியாக அந்தச் சொத்தை வைத்து பணத்தை ரெடி பண்ணுகிறார் பாலாஜி சக்திவேல். ஆனால் அந்த நேரத்தில் பண மதிப்பிழப்பு நடவடைக்கையை ஒன்றிய அரசு அமல் படுத்த, பாலாஜி சக்திவேல் & பாலா டீம் பணத்தை எப்படி மாற்றினார்கள் என்பது மீதிப்படமாக தொடர்கிறது

அறிமுக கதாநாயகன் பாலா முதல்படம் என்பதால் சில இடங்களில் தடுமாறத்தான் செய்கிறார். ஒருசில இடங்களில் அவரது உடல்மொழி பரவாயில்லை. கதையின் நாயகன் பாலாஜி சக்திவேல் தான். “அதுக்குத் தான் நீ இருக்கிய” என்ற வசனத்தை சொல்லி வெள்ளந்தி மனிதராய் ஈர்க்கிறார். அர்ச்சனா மிகத்தரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பாலாவின் நண்பராக வரும் காக்கா மகேஷ் கொடுத்த வேலையைச் செய்துள்ளார். நாயகியும் நல்ல நடிப்பை வழங்கியுள்ளார்

படத்தில் பாடல்களை விட பின்னணி இசை அசத்தலாய் அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் இயல்பான. லைட்டிங்-ஐ செட் செய்து விஷுவலை கதைக்கு நெருக்கமாக மாற்றியிருக்கிறார்.

நடிகர்களின் தேர்வில் கவனம் செலுத்திய இயக்குநர், திரைக்கதையில் போதுமான எமோஷ்னலை கொண்டு வரத்தவறியுள்ளார்.
டீமானிட்டிசேஷன் சமயத்தில் நடந்த மக்கள் பிரச்சனைகள், பணம் மாற்றித்தருவதில் நடந்த கட்டப்பஞ்சாயத்துகள் கமிஷன்கள் போன்றவற்றை துல்லியமாகவும் தைரியமாகவும் திரையில் காட்டியுள்ளார் இயக்குநர் ஷெரிப்.
எமோஷ்னல் கனெக்டிவிட்டியில் இன்னும் அழுத்தம் சேர்த்திருந்தால் காந்தி கண்ணாடி கவனம் பெற்றிருக்கும்
2.75/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *