காதலின் துணைகொண்டு Gun கல்ச்சரை ஒழிக்கும் ஹீரோவின் கதை
தமிழ்நாட்டிற்குள் துப்பாக்கி கலாச்சாரத்தை கொண்டு வருவதற்கு ஒரு சிண்டிகேட் அமைத்து செயல்படுகிறது ஒரு கூட்டம். அதைத் தடுத்து நிறுத்த பிஜுமேனென் தலைமையில் NIA அமைப்பு போராடுகிறது. இன்னொரு புறம் சிவகார்த்திகேயன் தன் காதல் தோல்வி அடைந்ததிற்காக தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறார். அதற்கான முயற்சிகளிலும் இறங்குகிறார். ஒரு கட்டத்தில் சிவகார்த்தியனை வைத்தே வில்லன் டீமை வளைக்க பிஜுமேனென் திட்டம் போடுகிறார். அந்தத்திட்டம் பலித்ததா? சிவகார்த்திகேயன் காதல் கதை என்ன என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வதே படம்
முழுக்க முழுக்க மாஸ் ஹீரோவாக மாறி நிற்கிறார் சிவகார்த்திகேயன். மேலும் சில எமோஷ்னல் காட்சிகளில் கலங்கடித்துள்ளார். நாயகி ருக்மனி வசந்த் பார்ப்பதற்கு அழகாக இருப்பது போலவே ரசிப்பதற்கு நன்றாகவும் நடித்துள்ளார். துப்பாக்கி பட வில்லனோடு மற்றொரு வில்லனும் இணைந்திருக்கிறார். இருவருமே மிரட்டியுள்ளனர்
பிஜுமேனென் கம்பீரமாக அசத்தியுள்ளார். விக்ராந்த் கவனிக்க வைக்கும்படி நடித்துள்ளார்
அனிருத் காட்சிகளில் இருக்கும் வெயிட்டேஜுக்கு மேலும் பெரிய மைலேஜ் கொடுத்துள்ளார். பாடல்களும் ஈர்க்கின்றன. கேமராமேன் சுதீப் பிரமாதப்படுத்தியிருக்கிறார். எல்லாக் காட்சிகளிலும் விஷுவல் குவாலிட்டியில் அவர் குறை வைக்கவேயில்லை
சண்டைக்காட்சிகளில் ஸ்டண்ட் மாஸ்டரின் பேருழைப்பு தெரிகிறது
ஹீரோவிற்கு சம்பந்தமில்லாத ஒரு பெரிய ஆபரேசன் திட்டத்திற்குள் ஹீரோவை கொண்டுவருவதற்காக திரைக்கதையில் சில மேஜிக் செய்துள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். அவற்றில் சில லாஜிக் கேள்விகள் இருந்தாலும் நன்றாக ரசிக்க முடிகிறது. 15 நிமிடங்களுக்கு ஒருமுறை வரும் ட்விஸ்டும் திருப்தியை தருகின்றன. முழுக்க முழுக்க ஆக்சன் பேக்கேஜ் படம் என்றாலும் ஆங்காங்கே காதல் காட்சிகளும் எட்டிப்பார்க்கின்றன. ஆக்சன் விரும்பிகளுக்கு ஆக்சிஷன் ஏற்றும் படமாக மதராஸி வந்துள்ளது. இனி முருகதாஸுக்கு நல்ல ராசி தான்
3.25/5
-வெண்பா தமிழ்

