மீண்டும் ஒரு காதல் பாடத்தை கொடுக்க முயற்சித்துள்ளார் இயக்குநர் காந்தி கிருஷ்ணா
இன்ஸ்டா கால ஒரு இளைஞனும் இளைஞியும் இன்சிடெண்டாக காதல் கொண்டு திருமணமும் செய்துகொள்கின்றனர். சொல்லி வைத்தது போல விரைவிலே டிவோர்ஸுக்கு வந்து நிற்கிறார்கள். நீதிமன்றம் அந்த ஜோடியை கவுன்சிலிங்கிற்கு அனுப்புகிறது. கவுன்சிலிங் கொடுக்கும் கஸ்தூரி அவர்களுக்கு ஒரு கதையைச் சொல்கிறார். அந்தக் கதைதான் ஹீரோ ராணவ், ஹீரோயின் ரோஸ்மின் இருவருடைய காதல் மற்றும் திருமணக்கதை! இவர்கள் இருவரின் வாழ்வும் காதலில் துவங்கி கல்யாணத்தில் தொடர்ந்து எப்படியான முடிவை எட்டியது என்பதே படத்தின் மீதி திரைக்கதை
கதையின் நாயகனாக ராணவ் ஓரளவு தேர்ந்த நடிப்பை கொடுத்துள்ளார். எமோஷ்னல் காட்சிகளில் இன்னும் வீரியமான நடிப்பை வழங்கியிருக்கலாம். நாயகி ரோஸ்மின் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். க்ளைமாக்ஸ் காட்சியில் தேர்ந்த நடிகையாக தென்படுகிறார். சம்பத் சில காட்சிகளில் ஓவர் நடிப்பை தந்துள்ளார். ரவிமரியா கொடுத்த வேலையைச் சரியாகச்செய்துள்ளார். கஸ்தூரி கேர்கடர் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை. அர்ச்சனா, க்ரித்திக் மோஹன், ரங்கநாதன் ஆகியோர் ஒகே
படத்தில் இல்லாத உணர்வெழுச்சியை தன் இசையில் தந்துள்ளார் ஜிவி பிரகாஷ்! பாடல்களும் நன்றாக வொர்க்கவுட் ஆகியுள்ளது. பன்னீர் செல்வம் தனது ஒளிப்பதிவு பணியை கவித்துமாக செய்துள்ளார். ஒரு ஹனிமூன் சாங் ஆகத்தரமாக படமாக்கப்பட்டுள்ளது
பிரிவு என்பது சுலபம். உறவை நீட்டித்து வாழ்வது தான் கடினம்! ஆனால் அந்தக் கடினத்தை கடப்பது தான் பேரானந்தம் என்பதைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் காந்தி கிருஷ்ணா! கதையாக இதை அவர் சொல்லியிருந்தாலும், திரைக்கதை திக்கு தெரியாமல் எங்கெங்கோ செல்கிறது..அவற்றை இன்னும் சிறப்புற அமைத்திருக்கலாம்! கேரக்டர்களுக்கான ரைட்டிங்கிலும் அதீத கவனம் செலுத்தியிருக்கலாம்
பிரிவதற்கு முன் சற்று சிந்தியுங்கள் என்று சொன்ன ஒரு மெசெஜுக்காக மட்டும் பிரேக்ஃபாஸ்டை பாராட்டலாம்
2.75/5
-வெண்பா தமிழ்

