ஆதிக்கச் சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? – நூல் விமர்சனம்

வச்சப் புள்ளியில் இருந்து புள்ளி அளவு கூட விலகாமல் நின்னு பேசுது இந்தப்புத்தகம்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பெரியாரின் குரல் பெரிதாக ஒலிக்கவில்லை என்ற ஒரு சிலரின் அறியாமை குற்றச்சாட்டுகளுக்கு பெரியாரின் எழுத்துக்களாலும் கருத்துக்களாலுமே தேடித்தேடி பதில் தந்திருக்கிறார் திருமாவேலன் சார்.

தனிப்பட்ட முறையில் நமக்கு நிறைய தகவல்களும் தெளிவும் கிடைச்சது..

நாடார் சமூகம் உள்பட பதினெட்டு சாதி ஜனங்களோட ஓட்டு வீடுவளுக்கும் பனை மரங்களுக்கும் வரி போட்டது திருவிதாங்கூர் சமஸ்தானம். கூடவே சுசீந்திரம் கோயில் உள்பட ‘அவாள்’ புழங்கும் பல கோயில்களுக்குள் அனுமதியே கிடையாது. அதை எதிர்த்து புரட்சிப் பண்ண வரலாறு வைகுண்டருக்கு உண்டு.

“அவன் என்னடே உன்ன உள்ள விடமிண்டேன்னு சொல்லுதது. நீ வால”ன்னு ஒரு கண்ணாடிய நிறுத்தி “இதப்பாத்து கும்புடு. உனக்கு நீதான் சாமி”ன்னு அடிச்சி சொன்னவரு வைகுண்டரு.

மனுசனுவளப் பிரிச்சிப் பாக்க அயோக்கியத் தனத்தை கடவுள் ஆதரிக்கிறார்னா அந்தக் கடவுள் நமக்கு வேண்டாம்னார் பெரியார். இரண்டுமே பெரிய சிந்தனை தான்.

அறிந்து பல சாதிமுதல் அன்பொன்றுக்குள்ளானால் பிரிந்து மிக வாழாமல் பெரியோனாய் வாழ்ந்திருப்பார்”ங்கிறார் அய்யா. ஜாதி ஒழியணும்னு பெரியார் சொல்றதுக்கும் எல்லாச்சாதியும் ஒண்ணுன்னு வைகுண்டர் சொல்றதுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல.

உன்ன ஒண்ணா இருக்க முத சாதிக்காரன்னு சொல்றவன் விடவே மாட்டான்..ஏன்னா உனக்கு கீழ நாலுவேரு அவனுக்கு கீழ நாலுவேருன்னு ஷத்திரியன் சூத்திரன்னு பிரிச்சி வச்சிட்டா ஒவ்வொருத்தனுக்குள்ளும் “அடிச்சக்கை நமக்கும் சில அடிமைவ இருக்கான்வ”னு ஆதிக்க மனோபாவம் வந்துரும். இப்படிப் போயிப் போயி தான் கீழ அடிமட்டத்துல இருக்கவங்க அநியாயத்துக்குச் சங்கடப்படுதாங்க. இது சரியாகணும்னா வர்ணாசிரமத்தைத் தூக்கிப்பிடிக்கிற எல்லாம் ஒழியணும். இது பெரியார்.

இப்ப என்னன்னா எந்த ஜனங்களுக்கு ஆதரவா எந்தக் கோஷ்டிவளை பெரியார் எதிர்த்தாரோ அந்தக் கோஷ்டிவ கூட தான் இன்னைக்கு நம்மக் கோஷ்டிவ சுத்துதுவ. நாடார்வ பந்தி பரிமாறினா நாங்க சாப்பிட மாட்டோம்னு சொன்ன குருப்புவளை தான் இன்னைக்கு அநேக நாடாக்குமாரு யாகம் வளக்கவும் மந்திரம் சொல்லவும் கூப்டுறாங்க..ஏன் என் அக்கா வீட்லே கிரகப்பிரவேஷம் அவங்க தலைமை தான். அப்பம் பண்ணவங்களுக்காக இப்ப இருக்கவங்களை பழி சொல்லக் கூடாது தான். ஆனா இப்பமும் அந்தப்பேதம் இருக்கேய்யா. ஒரு டிவி சேனலுக்குள்ள அய்யாவழி நாமம் வச்சிட்டு போனதும் ஒருத்தா கேட்டா, “நாடாராடா நீ?” ம்ம்னதும், “த்தா எப்படி கிடந்த பயல்வ..இன்னைக்கு வின்னு ஏறியட்டியள” எவ்ளோ வன்மம் பாருங்க.
அவங்களை நம்ம மதிக்கணும் அவங்களும் நம்மளை மதிக்கணும்..அதுபோதுங்கிறேன். ஏன் கூட்டியாந்து வச்சி சாமி சாமிங்கணும். சிவ சிவ அரகரா சொல்லி பால் காய்ச்சா புது வீட்ல பால் காயாதா? இல்லனா தங்களுக்குப் பிடிச்ச சாமிய நீயே பூசை பண்ணி விழா நடத்து. பிறப்பு அடிப்படையில நீ ஒருத்தனை உன்னை விட உயர்வுன்னு நினைச்சா, இன்னொருத்தனை உன்னை விட கீழன்னு நினைக்கத் தோணும். அது அப்படியே வளரும். வெட்டுக்குத்து ஆணவக்கொலை எல்லா மண்ணாங்கட்டியிம் அதனால தான் வரும்.

சரி புத்தகத்துக்கு வருவோம்..

புத்தகம் மொத்தமும் பெரியார் ஆதிக்கச் சாதின்னு சொல்றவங்களுக்கு மட்டும் தான் குரல் கொடுத்தார் என்ற வாதத்தை அடிச்சி நொறுக்குது. குறிப்பா 1968-ல கீழ்வெண்மணியில் எரிக்கப்பட்ட கூலித் தொழிலாளிகள் உயிர்களுக்கு பெரியார் போதிய ரெஸ்பான்ஸ் பண்ணல அப்படின்ற குற்றச்சாட்டுக்கு அவ்வளவு அழகான பதில் இருக்கு.

அயோத்திதாசர் புகழை பெரியார் மறைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு அயோத்திதாசரே சாட்சி சொல்ற அளவில் பதில் கொட்டிக்கிடக்கு. வாசிக்கிற யாரையும் வகுந்தெடுக்காம வகுப்பெடுக்குது புத்தகம்.
நன்றி Thirumavelan Padikaramu சார் ❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *