ஆரோமலே- விமர்சனம்

ஆரோமலே என்ற சொல்லுக்கு என் அன்பே என்று அர்த்தமாம். படம் அர்த்தம் நிறைந்து எதாவது சொல்லியிருக்கிறதா?

ஹீரோ கிஷன் தாஸ் பள்ளிக்கூடம் பயில்கையில் ஒரு பெண்ணை விரும்புகிறார். அக்காதல் தோல்வியில் முடிகிறது. அடுத்ததாக கல்லூரி பருவத்தில் ஒரு பெண்ணை விரும்புகிறார். அந்தக் காதலியும் இவரை நிராகரிக்கிறார். அடுத்து வேலைக்குச் செல்லும் போது ஒரு பெண்ணை காதலிக்கிறார். அந்தக் காதலாவது இவருக்கு வெற்றியைக் கொடுத்ததா? என்பதே படத்தின் கதை

ஒரு ரீல்ஸ் ஓடும் நேரத்திற்குள் எமோஷ்னலை மாற்றிக்கொள்ளும் இக்கால இளைஞர்களை தனது நடிப்பில் வெளிப்படுத்த முயற்சித்துள்ளார் கிஷன் தாஸ். நல்ல அட்டெம்ப்ட்! ஹீரோயின் ஷிவாத்மிகா தரமான தேர்வு. நிறைய காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். நண்பராக வரும் ஹர்ஷ்த்கான் ஆகச்சிறப்பாக நடித்து ‘ஆகா’ என பெயர் வாங்கியுள்ளார். வி.டி.வி கணேஷ் எமோஷ்னல் காட்சிகள் மற்றும் காமெடி காட்சிகள் இரண்டிலுமே ஸ்கோர் செய்துள்ளார்

சித்துகுமாரின் இசை திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளது. கவதம் ராஜேந்திரன் நல்ல ஒளிப்பதிவை கொடுத்துள்ளார்

இக்கால இளைஞர்களுக்கு ஏற்ற ஒரு கதையை தேர்வு செய்து எழுதியுள்ளார் இயக்குநர் சாரங் தியாகு. இவர் நடிகர் தியாகுவின் மகனார். திரைக்கதையில் முதல் பாதி தந்த சுவாரஸ்யத்தை பின்பாதி தரவில்லை என்பது சிறு ஏமாற்றம். இன்னும் சற்று மேன்மையான திரைக்கதையை அமைத்திருந்தால் ஆரோமலே யாரும் சொல்லாமலே பெரும் ஹிட் அடித்திருக்கும். தற்போது ஒன் டைம் வாட்சபள் என்ற டீசன்ட் கேட்டகிரியில் படம் உள்ளது
3/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *