மாக்கியவெல்லி காப்பியம் (ஆகோள்-11) – நூல் விமர்சனம்

இந்த நாவலின் முதல் பாகமான ஆகோள் ஆகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி முடிந்திருந்து..அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றாத அளவில் வெளிவந்தது ஆகோளின் இரண்டாம் பாகமான மாக்கியவெல்லி காப்பியம்.

அறியவிலும், அறிவியல் சார்ந்த புனைவும், மரபும், மனிதமும், வரலாறும், வீரமும், விஞ்ஞானத்தின் அசுரபலமும் நாவலின் அடிநாதங்கள்

அடையாள் என்ற தனிமனிதனின் அடையாளங்களை பாதுகாப்பாக வைப்பதற்கு வீர் ஜடாயு என்ற கால ரெயிலில், 2032-ல் இருந்து நித்திலன் தலைமையில் ஒரு குழு 1920-ஆம் ஆண்டுக்குச் செல்லும். அப்போது மதுரை பெருமாநல்லூரில் கைரேகைச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடக்கும். கள்ளர் இனம் நடத்தும் அந்தப் போராட்டத்தில் நித்திலன் சில உணர்ச்சி வசத்திற்குள் சிக்கி, அந்தக் காலகட்டத்திலுள்ள சின்னமாயன் என்ற சிறுவனை தன்னோடு அழைத்து வந்துவிடுவார். மேலும் நித்திலனால் காலம் பின்னோக்கி வந்து பாதுகாக்கப்பட்ட மக்களிம் தரவுகள் மோகன் ஜனார்த்தனால் திருடப்படும் சூழல் நிலவ, நித்திலன் அதைக் கண்டுபிடிப்பதோடு முதல் பாகம் நிறைவுறும்

இந்த இரண்டாம் பாகம் 2057-ல் துவங்குகிறது. தேசமே போற்றும் அறிவியல் அறிஞராக நித்திலன் இருக்கிறார். இந்தியாவிலிருந்தாலும் தனித்த அடையாளத்தோடு இருக்கும் தமிழ்நாட்டில், மக்களின் அடையாள எண்களான நியூரா எண்களை அதி தீவிரமாக பாதுகாக்கிறார் நித்திலன்.

முதல் பாகத்தில் அடையாள் தடயங்களை திருடியவரான ஜனார்த்தன் மோகனின் மகனான மாக்கியவெல்லி,
நியூரோ எண்களை திருடத் துடிக்கிறான்.

நியூரோ எண்கள்?

ஆதார் எண் போன்றது தான் என்றாலும் நியூரா எண்கள் நமது சிந்தனைகள் உள்பட சகலத்தையும் உள்ளடக்கியது. அதைத் திருடுவதன் மூலம், மக்களின் சிந்தனைகளை கூட மாற்றியமைக்க முடியும். அந்தக் கோரம் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் நித்திலன், கடலுக்குள் மேல் ஒரு செயற்கை மேகத்தை உருவாக்கி, அந்த மேகத்திற்குள் இணையவழியில் நியூரா எண்களைப் பாதுகாக்கிறார். இந்த நியூரா எண்களைப் பாதுகாப்பது நெபுலா திட்டம். அத்திட்டத்தை தவிடுபொடியாக்கத் துடிக்கிறான் மாக்கியவெல்லி. அவன் கள்ளத்தனம் மிகுந்தவன் என்பதால், நித்திலன், எதை எந்தக் காலத்திற்குள் வைத்திருக்கிறார் என்ற வேர் தேடுகிறான். அந்த வேர் 1920- காலகட்டத்தில் இருக்கிறது. மாக்கியவெல்லி, அங்கு செல்கிறான். 1920-ல் இருந்து நித்திலனால் சிறுவனாக இருக்கும் போது 2032-க்கு ஸ்ட்ரேட்டாக எடுத்து வரப்பட்ட சின்னமாயன் மாக்கியவெல்லித் திட்டத்தை முறியடிக்க கிளம்புகிறான். கூடவே அவன் காதலி நெய்தலும்.
மாக்கியவெல்லியை சின்னமாயன் முடிப்பது தான் க்ளைமாக்ஸ்.

Sure ah-ஒரு பரபர வெப்சீரிஸ்க்கான Content இது. அறிவியல் புனைவும், வரலாறும் மிக்ஸ் ஆகியிருக்கும் நாவலை துளியும் போரடிக்காமல் எழுதிச்சென்றுள்ளார் நூலாசிரியர் கபிலன் வைரமுத்து

சுஜாதாவிற்குப் பின் நான் ரசிக்கும் வசனங்களை கொண்டது கபிலன் வைரமுத்து வசனங்கள்.

“எந்த வெளிச்சமும் இல்லாத போது, இருட்டை நம்புறது தப்பில்லையே”

“ஒரு அதிகாரத்தை அகற்றிட்டு, அந்த இடத்திற்கு இன்னொரு அதிகாரம் வர்றது புரட்சி இல்ல. அதிகாரப்பகிர்வு தான் புரட்சி” 👌

டிஸ்கவரி பதிப்பகம் ஆகச்சிறப்பாக அச்சடித்து அசத்தியுள்ளனர்

Best one நாவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *