இது பெண்களுக்கான படம்.. ஆண்களுக்கான பாடம்
விண்வெளி கனவுடன் இருக்கும் பத்தாம் வகுப்பு பெண்ணை அவசரமாக துல்கருக்கு திருமணம் முடித்து வைக்கிறார்கள். திருமணம் முடிந்த நாளில் துல்கர், “கல்யாணம் பண்ணலன்னா என்ன பண்ணியிருப்ப?” என்று கேட்கிறார். கல்யாணப் பெண்ணான நாயகி சாத்விகா வீரவல்லி தான் விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என்ற தனது கனவைச் சொல்கிறார். மனைவியின் கனவை நெஞ்சில் தூக்கிச் சுமக்கிறார் ஹீரோ துல்கர். அவர் சுமக்கும் கனவு சாத்விகா வீரவல்லியை விண்வெளிக்கு அனுப்பியதா என்பது மீதிக்கதை
முதலில் துல்கர் சல்மானுக்கு ஒரு ஸ்பெசல் வாழ்த்து! இப்படியான படங்களை தேர்வு செய்தமைக்கும்.. பெண்ணுக்கான ஸ்பேஸை படத்தில் அதிகப்படுத்தியதிற்கும். நடிப்பில் அவரைச் சொல்லவேண்டுமா என்ன? பின்னியுள்ளார். சாத்விகா வீரவல்லி எல்லா எமோஷ்னலையும் முகத்தில் கொண்டு வந்து அசரடித்துள்ளார். ஸ்ருதிஹாசன் நல்ல ரோலில் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார். ஸ்வாசிகா படத்தின் முக்கியமான கீ ரோல். நன்றாகச் செய்துள்ளார். கெளதம் மேனென், நாசர் உள்ளிட்ட எல்லாக் கேரக்டர்களும் சிறப்பு செய்துள்ளனர்
படத்தின் ஆதுரமாகவும் ஆன்மாவாகவும் இருந்து அசத்தியுள்ளார் ஜிவி பிரகாஷ். பாடல்கள் ஆர்.ஆர் இரண்டுமே அடிதூள். ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் பிரம்மாண்டமான ஒளிப்பதிவை எதார்த்தமாக தந்துள்ளார். CG வொர்க் கூட பிரமாதமாக வந்துள்ளது
டெக்னிக்கல் ஏரியாவை விட எமோஷ்னல் ஏரியாவில் நிறையவே உழைத்துள்ளார் இயக்குநர் பவன் சதினேனி. ஸ்வாசிகா கேரக்டர் மூலம் துல்கர் கொடுக்கும் ஒரு எக்ஸ்ப்ளைன் காட்சி படத்தின் தரத்திற்கு ஒரு நற்சான்று. துல்கரை ஒரு தலையாக விரும்பும் ஒரு பெண் கேரக்டரை இயக்குநர் வடிவமைத்திருந்த விதமும் அருமை. ஒரு Up&down உள்ள மோட்டிவேசன் படம் தான் என்றாலும் படத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள கோர்வையான காட்சிகள் தியேட்டரை விட்டு நம்மை கலங்க வைத்தும் மகிழ வைத்தும் அனுப்புகிறது. Sure ah சொல்லலாம் AOT இந்த வார வின்னர்
3.75/5
-வெண்பா தமிழ்

