பகத்பாசில் நேரடித் தெலுங்குப்படத்தில் நடித்தபடம்.. எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்கிறதா?
வறுமையை வாழ்வாக கொண்ட பகத்பாசில் ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர். தனக்கு பணம் வேண்டுமென்பதற்காக வண்டியை கன்னாபின்னாவென ஓட்டும் நபர். அவர் வாழ்வை ஓட்டுவதற்கு அல்ல..காப்பாற்றிக்கொள்ளவே 25 லட்சம் தேவைப்படும் சூழல் அவருக்கு அவரது சீட்டிங் செயலால் வருகிறது. தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு பணக்கார சிறுமியைக் கடத்துகிறார். ஆனால் அந்தச் சிறுமி ஒரு மர்மமானவர். அந்த மர்மம் என்ன? என்பது படத்தின் விரிவான கதை
முதல்பாதி வரை இந்தப்படத்தில் பகத்பாசில் நடிக்க என்ன இருக்கு என்றே தோன்றியது. ஆனால் அந்த எண்ணத்தை இரண்டாம் பாதியில் அடித்து நொறுக்கிவிட்டார் பகத்பாசில். தேர்ந்த நடிப்பைக் கொடுத்து அசத்திவிட்டார். சிறுமியாக வரும் சாரா பலேகர் நம் நெஞ்சை உலுக்கி விடுகிறார். குறிப்பாக கடைசி 20 நிமிடம் படத்தின் ஆன்மா அவரே. மேலும் நடித்தவர்களில், மகேஷ் மஞ்ச்ரேகர், செளரப் சச்தேவா, வெங்கடேஷ் காகுமானு உள்ளிட்டோர் கவனிக்க வைக்கின்றனர்
கால பைரவாவின் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது க்ளைமாக்ஸ் நெருக்கத்தில் வரும் பின்னணி இசை அருமை..ஒளிப்பதிவாளர் பிராட் பிரான்சிஸ் சிறப்பாக பணியாற்றியுள்ளார். CG உதவியோடு வரும் இறுதிக்காட்சி சபாஷ் போட வைக்கிறது
இயக்குநர் ஷஷாங்க் யேலேட்டி இந்தப்படத்தை சீரியசாகவே அணுகியுள்ளார். எமோஷ்னல் அளவிற்கு காமெடிக்கான ரூட் படத்திலிருந்தும் ஏனோ தவறவிட்டுள்ளார். படத்தின் நீளத்தையும் சற்று குறைத்திருக்கலாம். படத்தின் கடைசி இருபது நிமிட எமோஷ்னல் காட்சிகள் நம்மைக் கட்டிப்போட்டு விடுகிறது. படம் கொஞ்சம் டல் அடித்தாலும் டீசன்ட் வாட்ச் கேட்டகிரியில் வைக்கலாம்!
3/5
-வெண்பா தமிழ்

