லெனின் பாண்டியன்- விமர்சனம்

அரசியல் செல்வாக்குள்ள வில்லன்களை எளிய மனிதர்கள் எதிர்கொள்ளும் கதை

நாயகன் தர்ஷன் கணேசன் ஒரு கான்ஸ்டபிள். அவருக்கு ஸ்டேசனில் எந்த மரியாதையும் இல்லை. ஒருபுறம் சிவகங்கை மாவட்டத்தில் பெருமளவில் மணற்கொள்ளை அடிக்கும் கூட்டம் எளிய மனிதரான கங்கை அமரனுக்கு ஒரு சிக்கலை ஏற்படுத்துகிறது. அந்தச் சிக்கலை கங்கை அமரன் கோர்ட் வரை கொண்டு செல்கிறார். கங்கை அமரனுக்குத் துணையாக தர்ஷன் கை கோர்க்க, ஜெயித்தது அரசியலா..அறமா? என்பதாக கதை விரிகிறது

நடிகராக இன்னும் பெட்டர் பெர்பாமன்ஸை தர்ஷன் கணேசன் கொடுக்க வேண்டும். ஒருசில இடங்களில் அவர் ஸ்கோர் செய்யவும் தவறவில்லை. ஸ்ரீரிட்டா ராவ் நல்ல நடிப்பால் கவர்கிறார். கங்கை அமரன் சில காட்சிகளில் நேச்சுரலை தவறவிட்டாலும் பல காட்சிகளில் தேறிவிடுகிறார். ரோஜா கொடுத்த வேலைக்கு குறைவில்லாமல் அசத்தியுள்ளார். படத்தில் சில காட்சிகளே வந்தாலும் ஜார்ஜ் மரியன் பின்னியெடுத்துள்ளார். ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ்வெங்கட் உள்ளிட்ட இன்ன பிற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர்

இளையராஜா இசை படத்தை உயிரோட்டமாக மாற்றியுள்ளது. A.M.எட்வின் சகே தனது ஒளிப்பதிவைத் திறம்படச் செய்துள்ளார்.

அழுத்தமான கதை படத்தின் பெரும்பலம். வசனத்தையும் மிகவும் ஆழமாக எழுதியுள்ளார் இயக்குநர் DD பாலசந்திரன்..ஆனால் திரைக்கதை போதிய வலிமையோடு இல்லை. காட்சிகளின் கோர்வையிலும், கதாப்பாத்திரங்களின் செயல்களிலும் இயல்புத்தன்மை மிஸ் ஆகியுள்ளது. ஆகச்சிறந்த தருணங்கள் படத்தில் ஆங்காங்கே இருப்பது நம்மை சோர்வடையாமல் பார்த்துக் கொள்கிறது. கோர்ட்டில் நடக்கும் சில காட்சிகளுக்காக மட்டுமே இந்தப் பாண்டியனைப் பாராட்டலாம்
3/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *