Double occupancy- விமர்சனம்

ஒரு பேண்டஸி கதைக்குள் கொஞ்சம் காதல் கொஞ்சம் காமெடி தூவியிருக்கிறார் இயக்குநர் அஸ்வின் கந்தசாமி

போஸ்வெங்கட் வினோதினி தம்பதிக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை காலை ஆறுமணி முதல் மாலை ஆறுமணி வரை பெண்ணாகவும், மாலை ஆறுமணி முதல் காலை ஆறுமணி வரை ஆணாகவும் மாறுகிறது. உலகத்தில் யாருக்கும் நிகழாதது இது. போஸ்வெங்கட் வினோதினி மறைவுக்குப் பின் இருவராக மாறும் ஒரே குழந்தை வளர்ந்து ஹீரோ சந்தோஷ், ஹீரோயின் ரேஷ்மா வெங்கடேஷ்-ஆக இருக்கிறார்கள். இப்போது பகலில் வாழும் ரேஷ்மாவிற்கு ஒரு காதலும், இரவில் வாழும் சந்தோஷுக்கு ஒரு காதலும் வருகிறது. 24 மணி நேரத்தில் 12 மணிநேர வாழ்வை வாழும் இருவரின் வாழ்வும் எதை நோக்கி பயணிக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை

கதையின் நாயகனான சந்தோஷ் ஆகச்சிறப்பாக நடித்துள்ளார். முதல் படத்திலே இப்படியொரு நடிப்பை வழங்கியுள்ளது அவர் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது. ரேஷ்மா வெங்கடேஷ் அழகாக இருப்பதைப் போலவே சிறப்பாகவும் நடித்துள்ளார். சம்யுக்தா தாராள கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை Aராள சந்தோசத்திற்கு தள்ளுகிறார். மற்றொரு நாயகனான வினோத்கிஷன் தன் கேரக்டரின் பொறுப்புணர்ந்து அசத்தியுள்ளார்..விடிவி கணேஷ் சிரிப்பிற்கு கியாரண்டி தருகிறார்

சாம் சி எஸ் இப்படத்தில் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகியுள்ளார். ஆக்சன் திரில்லர் தாண்டி இளமை துள்ளும் படத்திலும் தன்னால் அசத்த முடியும் என நிரூபித்துள்ளார். ஒளிப்பதிவாளர் படத்தின் விஷுவலில் மிகவும் கவனம் எடுத்து உழைத்துள்ளார் வாழ்த்துகள்

நிச்சயமாக கதையாக சிறப்பான ஐடியா இது. ரஜினி பிறந்தநாளில் பிறந்த குழந்தைக்கு ரஜினி என பெயர் வைத்து, இரு ரஜினியையும் ஒருவரையொருவர் புரிந்து Feel பண்ண வைத்தது என கலக்கியிருக்கிறார் இயக்குநர். முன்பாதி படம் அட்டகாசமாக பயணிக்கிறது. இருவரில் எப்படியும் ஒருவரே மிஞ்சுவார் என நமக்குத் தோன்றினாலும் முடிந்தவரை சஸ்பென்ஸை மெயிண்டெய்ன் செய்துள்ளார் இயக்குநர். க்ளைமாக்ஸில் நிறைய தடுமாற்றம் இருந்தது. இன்னும் கிளாரிபிகேசன் கொடுத்து படத்தை முடித்திருக்கலாம்

நிச்சயமாக ஜென்ஸி ஜெனரேசனை படம் ஏமாற்றாது
3/5
-வெண்பா தமிழ்

#Double-occupancy #Do

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *