தலைவர் தம்பி தலைமையில் (TTT) – விமர்சனம்

ஒரு கல்யாண வீடு, ஒரு சாவு வீடு. இந்த இரண்டு வீட்டுக்குள் லீடெடுத்து படம் ஸ்பீடெடுக்கிறது

ஊர்ப் பஞ்சாயத்து தலைவராக இருக்கிறார் ஜீவா. பதவியில் இருப்பவர்களின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? இருக்கும் பதவியை தக்க வைக்க வேண்டும் என்பது தானே! யெஸ் நாயகன் ஜீவாவின் நிலைப்பாடும் அதுதான். ஓட்டுக்களைச் சேகரிக்க வேண்டுமானால் ஊரில் நடக்கும் நல்லது கெட்டதுகளில் முதன்மை ஆளாய் முன் நிற்க வேண்டும். ஜீவா இளவரசு மகள் கல்யாணத்திற்காக அப்படி நிற்கிறார்.அதே சமயம் இளவரசின் பகையாளியும் பக்கத்து வீட்டுக்காரருமான தம்பி ராமையாவின் அப்பா இறக்கிறார். இளவரசு மகள் கல்யாணம் நடக்கும் அதே நேரத்தில் தன் தந்தையின் ஈமக்காரியம் நடக்க வேண்டும் என்கிறார் தம்பி ராமையா. இரு வீட்டு ஓட்டுகளையும் கவர நினைக்கும் ஜீவா எப்படி Safe கோல் அடிக்கிறார் என்பதே கதை

நைசாக பேசுவது, கெத்தாகப் பேசுவது, அக்கறையாகப் பேசுவது, ஜாலியாகப் பேசுவது என ஜீவா பேசிப்பேசியே பெரியளவில் நமது ஓட்டுக்களைப் பெற்றுவிடுகிறார். இளவரசு கேரக்டர் தரமாக எழுதப்பட்டுள்ளது. அவரும் பின்னியுள்ளார். தம்பி ராமையா ரகளை செய்துள்ளார்.குறிப்பாக அப்பா பற்றி அவர் பேசும் போதெல்லாம் சிரிப்பு கியாரண்டி. பிரார்த்தனாவும் செம்மயாக ஸ்கோர் செய்கிறார். ஜென்சன் திவாகர் கொடுத்த கேரக்டரை குறைவின்றிச் செய்துள்ளார்

விஷ்ணு விஜய் பின்னணி இசையில் நல்லதொரு வைப்-ஐ செட் செய்துள்ளார். அது காட்சிகளுக்குப் பெரிதும் உதவியுள்ளது. பாடல்களிலும் குறையேதுமில்லை. ஒளிப்பதிவாளர் பப்லு அஜு தேவையான ஷாட்களை கச்சிதமாக கம்போஸ் செய்து அசத்தியுள்ளார்

எளிமையான கதையை இன்ட்ரெஸ்டிங்காக சொல்வதற்கு வலிமையான திரைக்கதை நாலேஜ் வேண்டும். அது இயக்குநர் நித்திஷ் சகதேவிற்கு அதிகமாகவே இருக்கிறது. துளியும் தொய்வின்றி திரைக்கதையை அமைத்துள்ளார். குட்டிக் குட்டி காமெடி காட்சிகள் முதல், ஒவ்வொரு கேரக்டர்களின் வடிவமைப்பு வரை அசத்தியுள்ளார் இயக்குநர். சர்வ நிச்சயமாக இந்தப் பொங்கல் வின்னர் TTT தான். so தாரளமாக உங்கள் தலைமையில் படம் பார்க்க குடும்பத்தை அழைத்துச் செல்லலாம்
3.5/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *