அனலி – ஜாதக விமர்சனம்

விஜய் மீண்டும் நடிக்க வந்துவிடுவார் என்று ஜாதகம் சொன்ன நடிகை மற்றும் தயாரிப்பாளரான சிந்தியாவின் அனலி பட ஜாதகம் எப்படி இருக்குன்னு நாம பார்க்கலாமா? வாங்க நண்பா நண்பிஸ்

அனலியின் அதிபதியான கதை ஒரு ஆக்சன் பயணத்துக்கான லட்சணத்தைக் கொண்டது. ஆனால் திரைக்கதை எனும் சனி, ராசி அதிபதியான கதையை அடித்து ஓரம் உட்கார வைத்துவிட்டது. மேலும் அனலியின் தலைமை ராசிநாதனான சிந்தியாவிற்கு சுக்கிரன் எனும் கிரகம் சுத்தமாக ஒத்துழைக்கவே இல்லை. அதனால கேது எப்படி எல்லாவற்றையும் தாமதப்படுத்துமோ அப்படியே எல்லாக் காட்சிகளிலும் அவரது ரியாக்சனை தாமதப்படுத்துகிறது. பாதக ஸ்தானத்தில் அமர்ந்துள்ள குரு நல்ல நல்ல விஷுவல்ஸை கூட வீணடித்து விடுகிறது. பகை கிரகங்கள் போல பல்லிளிக்கும் வில்லன் கூட்டமும் அனலியை வச்சு செய்கிறது.

சூரியன் ஆட்சியாக இருந்தால் வெளிச்சம் கிடைத்தே தீரும். பட் அனலியின் ஆட்சி நாதனாக சந்திரனே இருப்பதால் அனலி ஏரியா கூட்டமில்லாத தியேட்டர் போல இருளோடி கிடக்கிறது

மேலும் அனலியின் ஜாதகம் சிந்தியாவிற்கு சந்தியா போல அரசியலில் கோலோச்சும் வாய்ப்பை கொடுக்கலாம். சினிமாவில் ஆக்சன் ஹீரோயினியாக பலனைக் கொடுக்குமா என்பதை குரு திசை துவங்கும் வரை சொல்லமுடியாது. குருதிசை துவங்குமா எனவும் சொல்லமுடியாது

மேலும் ராகு கற்பனையின் கிரகம் என்பார்கள்..அந்தக் கற்பனைத் திறனை கன்னாபின்னாவென வளர்த்துக்கொள்ளும் தயாரிப்பாளர் சிந்தியாவிற்கு பொருள் விரயம் வரக்கூடும். ஆனால் அவர் கடும் உழைப்பால் தளபதி விஜய் போல வெற்றிக்கொடி நாட்டலாம். அப்புறம் 9 கிரகங்கள் உச்சம் பெற்றாலும் சிந்தியா விஜய் கூட்டணி சாத்தியமாகவில்லை என்பதே ஜாதகம் சொல்லும் சேதி. காரணம் சிந்தியா சூரிய வெளிச்சத்தில் இருக்கிறார் அல்லவா!

அனலி பெறும் மதிப்பெண் என்ன? வேறென்ன.. ஏழ்ர தான்

-பாதகமில்லா ஜாதகக்காரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *