பறை இசையின் வழி நின்று சமூகநீதி பேசும் படம்
நாயகன் லியோ சிவக்குமார் அவரது நண்பர் ஆர்யன் எஸ்.என் இருவரும் இணைந்து ஊரில் பறையிசை குழு ஒன்று வைத்துள்ளார்கள்..சாவு வீட்டிலும், பெரிய கோவில்களிலும் பறை அடிப்பதில்லை என்ற கொள்கையோடு இருப்பவர்கள் இருவரும். அவர்கள் இசைக்குழு செல்லும் பல இடங்களில் தீண்டாமை கொடுமை நடக்கிறது. அதையும் தாண்டி ஊரில் ஒரு ஆதிக்கச் சாதி குருப்பிட.ம் ஹீரோவுக்கு ஒரு பஞ்சாயத்தும் இருக்கிறது. மேலும் ஒரு நிகழ்ச்சிக்காக சென்ற இடத்தில் ஹீரோவின் நண்பர் கொலை செய்யப்படுகிறார். அதன்பின் என்னென்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை
கதையின் நாயகனான லியோ சிவக்குமார் ஓரளவு நடித்து பாஸ்மார்க் வாங்கியுள்ளார். எமோஷ்னல் காட்சிகளில் இன்னும் அவர் தன்னை மேம்படுத்திக் கொள்ளவேண்டும். ஆர்யன் எஸ்.என் கொடுத்த கேரக்டரை உள்வாங்கி நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார். காயத்ரி ரமா நன்றாக நடித்துள்ளார். அவரின் கேரக்டரை இன்னும் ஸ்ட்ராங்காக எழுதியிருக்கலாம்
இசை அமைப்பாளர் தேவா தன்னால் முடிந்த மட்டும் படத்திற்கு நல்ல மைலேஜ் கொடுத்துள்ளார். பின்பாதியில் வரும் ஒரு சோகப்பாடலில் அவரது குரல் நம் மனதை உருக்குகிறது. ஒளிப்பதிவாளர் ரா.கொளஞ்சி குமார் சிக்கனமான விஷுவலை கொண்டுவந்துள்ளார்.
ஒடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு எதிராக ஆதிக்கச் சாதியினர் செய்யும் அட்டூழியங்களைப் பட்டியல் போட்டுப் பேசியுள்ளார் இயக்குநர் விஜய் சுகுமார். கதையை செறிவாக தேர்ந்தெடுத்த சுபா மற்றும் சுரேஷ் ராம் திரைக்கதையை கூடுதல் தெளிவோடு எழுதியிருக்கலாம். ஒருசில இடங்களில் வசனங்கள் ஷார்ப்பாக இருப்பது ஆறுதல். மொத்த எமோஷ்னலும் ஒரே இடத்தில் குவிக்கப்படாமல் ஆங்காங்கே ஜம்ப் ஆவதால் பறையிசை சில குறைகளோடு தான் உள்ளது.
இப்படியான படங்களில் குற்றங்களை காண்பதை விட குணத்தைக் காண்பதே மாண்பு. அவ்வகையில் மாண்புமிகு பறை மனிதநேய திரை
2.75/5
-வெண்பா தமிழ்

