கிறிஸ்டினா கதிர்வேலன்- விமர்சனம்

காதலை முன் வைத்து அதற்குள் ஜாதி மதம் ஆகியவற்றை தொகுத்து வந்துள்ள மற்றொரு சினிமா

கும்பகோணம் மாவட்டத்தில் 2011-ல் கதை நடக்கிறது. நாயகன் கெளசிக், நாயகி பிரதிபா இருவருக்கும் விருப்பம் இருக்கிறது. ஆனால் இருவரும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. இச்சூழலில் நாயகன் கெளசிக்கின் நண்பனுக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் நடக்க இருக்கிறது. அதனால் நாயகனும் நாயகியும் சாட்சிக்காக தங்களது அடையாள அட்டை மற்றும் புகைப்படத்தை கொடுக்கிறார்கள். ரிஜிஸ்டர் ஆபிஸில் நடக்கும் ஒரு தகிடுதத்தால் நாயகன் நாயகி பிரண்ட்ஸுக்கான சர்டிபிகேட்டிற்கு பதிலாக, நாயகன் நாயகிக்கான திருமண சர்டிபிகேட் ரெடிகாகிவிடுகிறது. அதன்பின் என்னென்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை

கதாநாயகன் கெளசிக் கதையின் நாயகனாக மாற மிகவும் முயற்சித்துள்ளார். அவரது முயற்சி அதி விரைவில் பலிக்கட்டும். கதாநாயகி பிரதீபா ஓரளவு சமாளித்துள்ளார். அவரது கேரக்டரை இன்னும் ஸ்ட்ராங்காக அமைத்திருக்கலாம். வில்லன் கேரக்டர்களிலும் போதுமான ஆழமில்லை. நண்பர்களாக நடித்துள்ள இளைஞர்கள் ஒகே ரகம். சிங்கம்புலி, கஞ்சா கருபு சின்னச் சின்ன ஆறுதலைத் தருகிறார்கள்

பாடல்கள் படத்தில் பெரிதாக எடுபடவில்லை. ரகுநந்தனின் பின்னணி இசை இன்னும் சிறப்பாக வந்திருக்கவேண்டும். ஒளிப்பதிவாளர் ப்ரஹத் முனியசாமி கூடுமான வரை நல்ல விஷுவலை கொடுக்க போராடியுள்ளார். இன்றைய ஜென்ஸி ஜெனரேசனுக்கு ஷாட் டிவேசன் வரை தெரிகிறது. அதனால் ப்ரேமிங்கில் நிறைய கான்சன்ரேட்டிங் தேவை

நல்ல இன்ட்ரெஸ்டிங்கான ஒன்லைன் கிடைத்தும், அதை தேர்ந்த திரைக்கதையாக்க தவறிவிட்டார் இயக்குநர் அலெக்ஸ் பாண்டியன். இன்னும் ஷார்ப்பான வசனங்கள் கிரிஷ்ப்பான எடிட்டிங் அமைந்திருக்க வேண்டும். எந்தக் கதாப்பாத்திரத்திற்கும் ஒரு முழுமையில்லை. டைட்டிலில் வியக்க வைத்தவர்கள், ரைட்டிங் மேக்கிங்கில் கோட்டை விட்டுள்ளனர்
2.5/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *