எத்தனை முறை அள்ளிப்பருகினாலும் திகட்டாதவர் ஓஷோ…
நீங்கள் ஏன் தவம் செய்தலை ஒர் இறக்கும் கலை என்று வரணிக்கிறீர்கள்…அதை ஏன் வளரும் கலை என்று சொல்லக்கூடாது?” என்றோர் கேள்விக்கு
ஓஷோவின் பதில்…
“நான் அதை ” வளரும் கலை” என்று குறிப்பிட்டால் உங்களுடைய அகங்கார மனம் திருப்தியுறும் என்று தெரிந்துதான் அதை “இறக்கும் கலை ” என்று சொன்னேன்..
ஒரு நல்ல செயலை செய்கிறவனுக்குள் கூட அகங்காரம் வந்துவிடுவது இயல்பு. அந்த அகங்காரம் (ஈகோ) தான் வாழ்தலை மிக சிக்கலுக்குள்ளாக்குகிறது என்கிறார். ஆக நல்ல செயல்களுக்கான பட்டம் கூட அகங்காரத்திற்கு ஊட்டம் கொடுக்கிறது என்பது ஓஷோவின் முடிவு. (என்னை அவரே பாராட்டிட்டாரு என்பதில் கூட அகங்காரம் இருக்கிறது. அது தன்னை மற்றவர்களிடம் இருந்து தனித்துக்காட்டுகிறது. தன்னை தனித்துக்காட்டுதலே ஈகோவின் ஆரம்பம். தலைவன் என்ன நுட்பமா ஆராய்ஞ்சிருக்காப்ல)
எனக்கோர் அண்ணன் அடிக்கடிச் சொல்வார் இந்த வாழ்வை காயம்படாமலும் காயப்படுத்தாமலும் வாழவேண்டும் என்றால் நமக்குள் ஈகோ வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எவனா(ளா)வது நமது ஈகோவைத் தூண்ட முனைந்தால் அவனை(ளை) விட்டு ஓடிட வேண்டும். ஏனெனில் ஈகோ உள்ளே வந்துவிட்டால் அன்பு வெளியே போய்விடும்.
அன்பு வெளியே போனபின் என்ன இருக்கிறது…?

