சக்தி திருமகன்- விமர்சனம்

வெற்றித்திருமகனா இந்தச் சக்தி திருமகன்?

ஒரு கதாநாயகனின் கேரக்டரில் கொஞ்சமாக புதுமை இருந்தால் நிச்சயமாக அந்தப்படம் கவனிக்க வைக்கும். இந்தப்படத்தில் தலைமைச் செயலகத்தில் தரகு வேலை செய்பவராக விஜய் ஆண்டனி கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளது. அது இன்ட்ரெஸ்டிங்காகவும் இருக்கிறது. தலைமைச் செயலகத்தின் அசைவுகளை அதிகாரிகளின் நகர்வுகளை அக்குவேர் ஆணிவேராக அறிந்தவராக இருக்கிறார் ஹீரோ விஜய் ஆண்டனி. பெரும் பவர் சென்டரான கண்ணன் வீட்டில் வேலை செய்தபடியே இவற்றைச் செய்து வரும் விஜய் ஆண்டனி, ஒரு கட்டத்தில் கண்ணனுக்கே எதிராக மாறுகிறார். அதற்கான காரணம் என்ன என்பதை பின்கதை சொல்கிறது

தனக்கான சட்டைக்குள் அற்புதமாக பொருந்திக்கொண்டார் விஜய் ஆண்டனி. இந்தப்படத்தில் அவரின் மாடுலேசன் உடல்மொழிக்கேற்ப அவரின் கேரக்டர் அமைந்துள்ளது. சிறப்பாகச் செய்துள்ளார். வாகை சந்திரசேகர் உள்ளிட்ட பிற கேரக்டர்களும் நன்றாக கவனிக்க வைக்கின்றனர். காதல் ஓவியம் படப்புகழ் கண்ணன் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார்

ஒளிப்பதிவில் நல்ல தரத்தை மெயிண்டெய்ன் செய்துள்ளார் ஒளிப்பதிவாளர். ப்ளாஷ்பேக் காட்சிகளில் கலரிங்கும் சிறப்பு. பின்னணி இசை பாடல்கள் இரண்டிலுமே செம்மயாக ஸ்கோர் செய்துள்ளார் விஜய் ஆண்டனி. தலைவன் இசையில் இன்னும் தன் பிடியை விடவில்லை

பழைய கதை என்றாலும் கச்சிதமான கதை ஒன்றைப் பிடித்து, அதை இன்றைய அரசியல் கலந்து பரபர திரைக்கதையாக்கி ரசிகனுக்கு நல்ல விருந்து வைத்துள்ளார் இயக்குர் அருண்பிரபு. முதல் பாதியில் சரியான கலவையோடு நகரும் திரைக்கதை பின்பாதியில் நிறைய தகவல்களால் சற்று தடுமாறவே செய்கிறது. ஆனால் காட்சிக்கு காட்சி ‘வாட் நெக்ஸ்ட்?’ என்ற கேட்க வைத்ததில் வெற்றித் திருமகன் ஆகியுள்ளார் சக்தி திருமகன்
3.25/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *