ஒரே டிக்கெட்டில் ஐந்து படம். யெஸ் ஐந்து கதைகள் கொண்ட கலவை இப்படம்
முதல் கதை. ஒரு சினிமா வெறியன் விஜே -ஆக இருக்கிறான். சினிமா ரசனையுள்ள ஒரு பெண் அவன் வாழ்வில் வருகிறாள். அப்படி ஆசையாக வந்தவளை கொல்கிறான் அந்த விஜே. அதன் காரணம் என்ன?
அடுத்து பிரிந்த காதலர்கள் ஒரு விபத்தின் வழியாக ஒன்று சேரும்போது ஏற்படும் சிக்கல்கள் குறித்த கதை.
இன்னொரு கதை காதல் தோல்வியால் தற்கொலை செய்யவுள்ள ஒரு இளைஞரை யூகிசேது காப்பாற்றுகிறார். காப்பாற்றியபின் அந்த இளைஞனுக்கு ஒரு கதை சொல்கிறார். அதுவொரு தனிக்கதை.
இவைபோன்ற இன்னும் இரு கதைகள் படத்திலுள்ளன
நடிகராக இப்படத்தில் நம்மை வெகுவாக ஈர்ப்பவர் யூகிசேதுதான். மனிதர் பின்னியெடுத்துள்ளார். அவர் அடிக்கும் எல்லா பன்ச்களும் மாஸ்டர் பிஸ். அடுத்ததாக சின்னி ஜெயந்த் கவர்கிறார். ராஜ் அய்யப்பா, சம்யுக்தா விஸ்வநாதன், நந்து, தீபக் பரமேஷ், காஜல் செளத்ரி, பீட்டர் கே உள்பட நிறைய நடிகர்கள் படத்தில். ஒருசிலர் சொதப்பினாலும் பெரும்பாலான நடிகர்கள் கவனம் ஈர்க்கின்றனர்
கீர்த்தன் பூஜாரி, சந்திப்பு அலுரி இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சில கதைகளில் கேமரா வொர்க் நன்றாக வொர்க் ஆகியுள்ளது. சரவணா சுப்பிரமணியன் இசையில் பாடல்கள் போதுமான அளவிலில்லை. பின்னணி இசை ஒகே ரகம்.
இந்த கதைகளில் காதல் தான் முக்கியமான பாடுபொருள். அதில் சின்னி ஜெயந்த் வரும் காதல் எபிசோட் அருமையாக இருந்தது. யூகிசேது அந்தக்காதல் கதையை சொல்லும் போதும் அது கனெக்ட் ஆகியது. வேறுகதைகளில் பெரியளவில் ப்ரஷ்னெஸ் இல்லை. அந்த ஒரு கதை தரும் நல்லனுபவத்திற்காக வேண்டுமானால் ஒருமுறை இந்தப்படத்தைப் பார்க்கலாம்
2.75/5
-வெண்பா தமிழ்

