அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு எழுதி இயக்கியுள்ள வேம்பு ரசிகர்களை கவர்கிறதா?
கதையின் நாயகி ஷீலாவிற்கு நமது பாரம்பரிய வீரக்கலையான சிலம்பம் மீது பெருங்காதல். அதை வைத்துப் பெரிதாகச் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவரின் அந்த நினைப்பிற்கு வலு சேர்ப்பது போல அவரது காதல் கணவர் ஹரி கிருஷ்ணன் உடனிருக்கிறார். அழகாக பயணிக்கும் ஷீலா வாழ்வில் ஒரு இடி விழுகிறது. அதில் அவர் உடைந்து போனாரா எழுந்து மீண்டாரா என்பதே வேம்புவின் மீதிக்கதை
ஷீலா வழக்கம் போல தனது நல்ல நடிப்பால் வேம்பு என்ற கேரக்டருக்கு உயிர் கொடுத்துள்ளார். மேலும் ஷீலாவின் கதை தேர்விற்கு ஒரு ஹார்ட்டீன். ஹரி கிருஷ்ணன் கிடைக்கும் இடங்களில் எல்லாம் சிக்சர் அடிக்கிறார் வெல்டன். மாரிமுத்து உள்பட சில கேரக்டர்கள் நச் என முத்திரைப் பாதித்துள்ளது
மணிகண்டன் முரளி கிராமப் படத்திற்கு ஏற்ற இசையை வழங்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் தனது பொறுப்புணர்ந்து உழைத்துள்ளார்
பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறி நிற்கும் இந்தக் காலத்தில், பெண்களுக்கு தற்காப்பு கலை அவசியம் எனச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஜஸ்டின் பிரபு. கதையின் நோக்கம் பிரமாதமாக இருந்தாலும், திரைக்கதை பிரகாசமாக கூடி வரவில்லை. ஆக்கத்தில் குறையுள்ள படம் தான். ஆனால் நோக்கத்தில் உயர்ந்து நிற்கிறது.
வேம்பு தான். ஆனாலும் இனிக்கிறது
3/5
-வெண்பா தமிழ்

