வேடுவன்-விமர்சனம்

தான் கொலைச் செய்யப் போகும் நபர் தன் காதலியின் கணவனாக இருந்தால் எப்படி இருக்கும்? என்ற இன்ட்ரெஸ்டிங்கான லைனை வைத்து அசத்தியுள்ளார் இயக்குநர் பவன்

ஆக்‌ஷுவலாக சீரிஸ் ஒருவரின் வாழ்க்கை வரலாறு என்ற போர்வையில் தான் துவங்கினாலும் துளிகூட ஆவணப்படம் Feel வரவேயில்லை. சூரஜ் என்ற நடிகராக வரும் கண்ணா ரவி ஒரு என் கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் கேரக்டரில் நடிக்கிறார். நடிக்கும் போது அந்தக் கேரக்டரின் முடிவில் அவருக்கு டவுட் வருகிறது. அந்த டவுட்டை க்ளீர் செய்ய அவர் மேற்கொள்ளும் பயணத்தின் வழியே ஒரு எமோஷ்னல் ட்ராமா அரங்கேறுகிறது. இதுதான் சீரிஸின் கதை

நாயகன் கண்ணா ரவி இந்தக் கேரக்டரை லட்டு போலா கையாண்டுள்ளார். சிறப்பான நடிப்பை பல காட்சிகளில் வழங்கி ரசிக்க வைத்துள்ளார். கிட்டத்தட்ட இன்னொரு நாயகன் போல வரும் சஞ்சய் அசத்தலான நடிப்பைக் கொடுத்துள்ளார். ஸ்ரவ்னிதா ஸ்ரீகாந்த், வினுஷா தேவி, ரேகா நாயர், லாவன்யா, உள்ளிட்ட ஏனைய நாயகிகள் நடிகர்கள் அனைவரும் மிகப்பொருத்தமான தேர்வு

ஒளிப்பதிவாளர் ஸ்ரீனிவாசன் தேவராஜ் தனது நேர்த்தியான பணியைச் சிறப்பாக கையாண்டுள்ளார். சிறு சிறு ப்ரேம்களிலும் நல்ல டீடைல். இசை அமைப்பாளர் விபின் பாஸ்லர் சீரிஸின் கதைப்போக்கை, காட்சியமைப்பை உணர்ந்து வாசித்துள்ளார். எடிட்டர் சுராஜ் கவீ கச்சிதமான பணியை மேற்கொண்டுள்ளார்

ஒரு பெரிய படத்திற்கும் குறைவான தொடருக்குமான இடைவெளி இந்த வேடுவனில் இதிலிருப்பதை உணர்ந்து இதை இயக்கியுள்ளார் இயக்குநர் பவன். சீரியசான ஒரு கதை பல இடங்களில் மென்மையாக அணுகியிருப்பதை நல்ல இயக்கத்திற்கான சான்று. கண்ணா ரவி தன் காதலியின் பிள்ளைகளோடு விளையாடும் ஒரு காட்சி அதற்கான சாட்சி

சிற்சில முரண்பாடுகள் இருந்தாலும் ஒரு ரோஸ்ட்கோலர் வாட்சிங்-க்கு உத்திரவாதம் தருகிறது இந்த வேடுவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *