இந்தப் படத்தின் தலைப்பிலே ஆடியன்ஸுக்கு ஒரு குழு கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாஸ்கர் சதாசிவம்
முருங்கை என்ற பேர்ல ஒரு கிராமம் இருக்கு. அந்தக்கிராமத்துல ரெண்டு கேங் இருக்கு. ரெண்டு கேங்கிற்கும் வெட்டியா சுத்துறதே வேலையா இருக்கு. இதில் ஒரு கேங்கிற்கு லீட் ஆன ஹீரோ கணேஷ் நாகேஷுக்கு ஒரு காதல் இருக்கு. அந்தக் காதலியான ஹீரோயின் ரித்விகா ஸ்ரேயாவிற்கும் ஹீரோமேல் காதல் இருக்கு. இருவரும் மொட்டை ராஜேந்திரன் வீட்டிற்குச் செல்வதற்கு ஒரு ரீசன் இருக்கு! அந்த ரீசன்ல என்ன இருக்கு என்பதில் தான் கதையே இருக்கு! இதுக்கு மேல சொல்ல என்ன இருக்கு.. ஜாலி படம் தானே. அதனால் ஜாலியா உருட்ட வேண்டிய தான்
ஹீரோ கணேஷ் நாகேஷ் தானொரு நடிப்புக் கலைஞனின் பேரன் என்பதை பல நேரங்களில் மறந்துவிடுகிறார் பாவம். சில இடங்களில் நினைவூட்டி விடுகிறார் அது லாபம். நாயகியும் ஹீரோவிற்கு சற்றும் சளைக்காமல் நடித்துள்ளார். மூன்று பொண்டாட்டி முனுசாமியாக மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார். நம்மைச் சிரிக்க வைக்க மிகவும் போராடுகிறார்.சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார். அவரின் மனைவியாக வருபவர்களில் சின்னாளப்பட்டி சுஜி அசத்தியுள்ளார். ஏனைய கதாப்பாத்திரங்கள் எல்லோரும் ஒகே ரகம்
இசை அமைப்பாளர் இன்னும் வலிமையான பின்னணி இசையை வழங்கியிருக்கலாம். ஒளிப்பதிவாளரின் உழைப்பு பரவாயில்லை
மது உடலுக்கு ஆபத்து என்ற கருத்தைச் சொல்லும் படம் கமர்சியலாக சில இடங்களில் சறுக்கியிருந்தாலும் பல இடங்களில் ரசிக்க வைக்கிறது. ஒரு நல்ல காமெடி ப்ளஸ் கருத்துப்படத்திற்கான வாய்ப்பிருக்கும் இக்கதையில் இயக்குநர் சிலவற்றைத் தவற விட்டுள்ளார். இருப்பினும் என்சாய் பண்ணுவதற்கு படத்தில் சில நல்லவை இருக்கின்றன. மேலும் சிறப்பான கருத்தைச் சொன்ன வகையில் படம் ஒகே
3/5
-வெண்பா தமிழ்

