டாக்ஸிக் மிகப்பெரிய விருந்தாக இருக்கும்- யாஷ்

சென்னை நேரு ஸ்டேடியத்தை கலங்கடிக்கும் விதமாக நேற்று டாக்ஸிக் படத்தின் இசைவிழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். விழாவில்
நடிகர் யாஷ் பேசியதாவது ..,

“தமிழ் மக்களே, நீங்கள் எப்போதுமே எனக்கு அளவில்லாத அன்பை வழங்கி வருகிறீர்கள். ‘KGF’ படத்தில் நடித்தபோது எனக்கு நீங்கள் அளித்த அன்பு அளப்பரியது. அப்போது என்னை அன்புடன் வரவேற்றீர்கள். தமிழ் மக்களுக்கு தலைவணங்குகிறேன்.

‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்தபோது, அது தயாரிப்பாளருக்கு மிகவும் வேதனையான தருணமாக இருந்தது. ஆனால் அப்போதும் நீங்கள் காட்டிய அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதது. விஜய் சாருக்கு நீங்கள் காட்டும் அன்பும் அப்படித்தான்.

நீங்கள் சினிமாவை மிகவும் நல்ல முறையில் அணுகுகிறீர்கள். ‘டாக்ஸிக்’ என்பது ஆர்வம் மற்றும் உணர்வுகளைப் பற்றிய திரைப்படம். இது முற்றிலும் வித்தியாசமான ஓர் உலகம். இந்தப் படம் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக இருக்கும்.” இவ்வாறு பேசிய யாஷ் மேலும் படம் குறித்தும் படக்குழு குறித்தும் நிறைய விசயங்களை பகிர்ந்து கொண்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *