நவம்பர் 21ல் வெளியாகிறது ‘தீயவர் குலை நடுங்க’ !

ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியிருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முதலாக இணைந்து நடிப்பதால் இப்படத்திற்கு பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. மேலும் சமீபத்தில் வெளியான டீசர் படத்தின் மீது பெரும் ஆவலைத் தூண்டிய நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை வெளியிட்டு, படக்குழு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் எனும் கருத்தை மையமாகக் கொண்டு, ஒரு அதிரடி ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

விரைவில் இப்படத்தின் இசை, டிரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பு, அதிகாரப்பூர்வமாக வெளியாகும். இப்படம் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *