‘செங்கேணி’ படத்தின் துவக்கவிழா!

இந்த படத்திற்கு கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் இயக்குனர் திரு. கோபாலகிருஷ்ணன் கோபிநாத், இவர் தமிழில் பல முன்னணி இயக்குனர்களிடம் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்ப கலைஞர்களாக பிரபல இசையமைப்பாளர் திரு N. R. ரகுநந்தன் இந்த திரைப்படத்திற்கு இசை பணியை செய்ய இருக்கிறார்.

பாடலுக்கான வரிகளை புகழ்பெற்ற கவிஞர் திரு. யுக பாரதி அவர்கள் எழுதுகிறார்கள்.

மேலும் ஒளிப்பதிவினை திரு. சின்ராஜ் ராம் என்பவர் மேற்கொள்ள இருக்கிறார்.

கலை இயக்கப் பணிகளை திரு B. சேகர் அவர்கள் கலை இயக்குனராக பணி செய்ய இருக்கிறார். இவர் கோட்ட, சர்தார் 2 & அமரன் ஆகிய திரைப்படங்களின் கலை இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தின் வசனத்தினை திரு. திருப்பதி ராஜா கோவிந்தராஜ் என்பவர் எழுதுகிறார்.

ஆடை வடிவமைப்பு பணிகளை திருமதி. மரியா மிலன் அவர்கள் மேற்கொள்ள இருக்கிறார்கள்.

மேலும் பல முன்னணி நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த திரைப்படத்தில் பங்கு பெற இருக்கிறார்கள்.

இது குறித்த அறிவிப்பு உங்களுக்கு எதிர்வரும் நாளில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதன் படப்பிடிப்பு நவம்பர் மாத இறுதியில் துவங்க இருக்கிறது, எங்களை நேரில் வந்து வாழ்த்திய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் இந்த நேரத்தில் எங்களது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *