காதலுக்காக எதையும் செய்யும் இளைஞனை காதல் என்ன செய்கிறது என்பதே படத்தின் அடிநாதம்
இந்திய ராணுவத்தின் டாப் பைலட் ஆக இருக்கிறார் தனுஷ். அவர் பணியில் செய்த சிறிய கவனப்பிழை அவரை ஒரு கவுன்சிலிங்கிற்கு செல்ல வைக்கிறது. கவுன்சிலிங் செய்யும் பெண்ணாக வருகிறார் நாயகி க்ரிதி சனோன். இருவரும் ஒருவரையொருவர் பார்த்து அதிர்ச்சியும் அழுகையும் கொள்கிறார்கள். அதற்கான காரணம் காதலாக இருக்கிறது. இருவரில் யார் காதலை வீழ்த்தியது? என்பதை படம் அழகான கவிதையாகச் சொல்லிச்செல்கிறது
தனுஷின் நடிப்பில் நிறைய ரஜினி சாயல். குறிப்பாக அவரது கல்லூரி காட்சிகளில் எக்கச்சக்க ரஜினி ரெபரன்ஸ். ஆனாலும் மனிதர் எமோஷ்னல் காட்சிகளில் பின்னியெடுத்துவிட்டார். தனுஷுக்கு சற்றும் குறையாமல் நடிப்பில் வெளித்துள்ளார் நாயகி க்ரிதி சானோன். அழகிலும் மனதை மயக்குகிறார். பிரகாஷ்ராஜ் ஒரு காட்சியில் அசுரன் தனுஷை நினைவுப்படுத்துகிறார். அட்டகாசமான நடிப்பு
காதல் படங்கள் என்றால் மட்டும் நம் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் எக்ஸ்ட்ரா எபெக்ட் போட்டு உழைப்பார் போல. மொத்தப்படத்தின் ஆன்மாவாக இருப்பது ஏ.ஆர் ரஹ்மானின் இசை தான். பாடல்களிலும் இதயம் நின்றெழுகிறது. ஒளிப்பதிவாளர் தஷர் காந்தி ரே ஆகச்சிறந்த அவுட்புட்-ஐ கொடுத்துள்ளார். வரைகலை உதவியோடு அநேக காட்சிகளை பிரம்மாண்டமாக காட்டியுள்ளார்
“காதல் எருவான மனிதனை உருவாக்கும். உருவான மனிதனையும் கருவாக்கும்” என்பார்கள். அது தனுஷ் வாழ்வில் நிகழ்கிறது. அதை அழகான
திரைக்கதையோடு
சொல்லியுள்ளார் இயக்குநர் ஆனந்த் எல் ராய். சின்னச் சின்ன லாஜிக் நெருடல்கள் இருக்கிறது. நிறைய இடங்களில் படம் ஸ்லோ ரைட் செல்கிறது. ஆயினும் “வாழ்வின் இலக்கை தீர்மானிப்பது இறைவன் தான்” என்பதை தனுஷ் உணரும் இடம் ஆகத்தரம். அந்த ஆன்மிக தத்துவத்தை நமக்கும் கடத்தியதில் தாரே இஷ்க் மே மனதில் காதலாக நிறைகிறது
3/5
-வெண்பா தமிழ்

