துடிப்பான திரைப்பட இயக்குநர் பூரி ஜெகன்நாத்தையும், புகழ் பெற்ற நடிகரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியையும் முதல் முறையாக ஒன்றிணைத்துள்ள பான் இந்திய ஆக்சன் என்டர்டெய்னர் படமான ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படம் – உண்மையான உணர்ச்சிகள் – அதிரடியான சண்டைக் காட்சிகள்- புதிரான மர்மம்- ஆகியவற்றின் கலவை என உறுதியளிக்கிறது.
கௌரி ஹெக்டேவாக நடிக்கும் தபுவின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பிறகு, படக் குழுவினர் தற்போது அவரது ஆளுமை மிக்க கதாபாத்திரத்தை மேலும் விவரிக்கும் வகையில்… ஒரு ஆற்றல் பெற்ற பிரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர்.
நகரின் சேரி பகுதிகளை பின்னணியாகக் கொண்ட இந்த முன்னோட்டம்.. படத்தின் கடினமான உலகத்தை நிலை நிறுத்த தொடங்கி, பின்னர் தபுவை ஒரு குறிப்பிடத்தக்க விதத்தில் அறிமுகப்படுத்துகிறது. அவர் ஒரு காரில் வந்து சிகரெட்டை பற்ற வைத்து.. உடனடியாக நிலைமையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருகிறார். ஒரு உள்ளூர் ரவுடிக்கு அவர் விடுத்த கடுமையான எச்சரிக்கையும்… அதைத் தொடர்ந்து அவர் கொடுத்த ‘பளார்’ என்ற அறையும்… கௌரி ஹெக்டே அதிகாரத்தைத் தேடுபவர் அல்ல… அதை கோருபவள் என்பதை உடனடியாக பிரதிபலிக்கிறது.
டைட்டில் லுக்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்- டீசர் – தற்போது வெளியாகி கவனம் ஈர்க்கக்கூடிய கிளிம்ப்ஸ்- ஆகியவற்றின் மூலம் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கதாபாத்திரங்கள் மற்றும் அவற்றின் உலகம் குறித்த ஆர்வத்தை இவை மேலும் தூண்டுகிறது.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய இந்திய மொழிகளில் இந்தியா முழுவதும் பான் இந்திய திரைப்படமாக வெளியாக தயாராகி வருகிறது.

