சரீரம்- விமர்சனம்

தலைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள இப்படம், திரைக்கதையில் கவனம் செலுத்தியுள்ளதா?

நாயகன் தர்ஷன் பிரியன், நாயகி ஷார்மி விஜயலக்‌ஷ்மி இருவரும் காதலர்கள். பணக்கார பெண்ணான ஷார்மியை ஏழைத்தாயின் மகனான தர்ஷன் கரம் பிடித்துவிடக்கூடாது என்று ஓவர் டைம் பார்த்து துரத்துகிறார் ஷார்மியின் தாய்மாமா ஆன மனோஜ். ஒரு கட்டத்தில் தங்களது காதலை காப்பாற்றிக்கொள்ள காதலர்கள் இருவரும் யாரும் யோசித்திடாத முடிவை எடுக்கிறார்கள்..அந்த முடிவிற்கான இலக்கை நோக்கி அவர்கள் செல்கையில் இன்னொரு ட்விஸ்ட் கதையில் நிகழ்கிறது.

நாயகனாக தர்ஷன் பிரியன் ஓரளவு கவனிக்க வைக்கிறார். எங்கும் பெரிதாக அவரது நடிப்பு துருத்தவில்லை..நாயகி ஷார்மி விஜயலக்‌ஷ்மி கொடுத்த வேலையை குறைவின்றிச் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் கேரக்டரில் வரும் மலைச்சாமி ஒகே ரகம். மனோஜ் கேரக்டரில் பில்டப் அதிகம் இருந்தாலும் பரவாயில்லை ரகம்

படத்தில் இசை அமைத்துள்ள பாரதிராஜா ஓரளவு கொடுத்த பொறுப்பைச் சரியாகச் செய்துள்ளார். ஒளிப்பதிவாளர்கள் டொர்னாலா மற்றும் பரணி குமார் இருவரும் நல்ல உழைப்பைக் கொடுத்துள்ளனர்

கதையின் தேர்விலே நல்ல கவனம் ஈர்த்துள்ளார் இயக்குநர் ஜிவி பெருமாள். கதையில் வித்தியாசம் காட்டிய இயக்குநர் திரைக்கதையில் சுவாரஸ்யம் கூட்டத் தவறியுள்ளார். எடுத்துக் கொண்ட கதைக்கு தரமான ஸ்கிரீன்ப்ளே அமைத்திருந்தால் சரீரம் மேலும் சிறப்பாக வந்திருக்கும். தற்போது வித்தியாச முயற்சி என்பதற்காக மட்டும் வரவேற்கலாம்
2.75/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *