மதுரை பின்னணியில் ஒரு திரில்லர் கதை
அதாகப்பட்டது பாதிக்கப்பட்ட ஒருவன் பழிவாங்கும் கதை ஆயிரமிருந்தாலும், இயக்குநர் பாலு இதில் சில புதுமைகளைச் செய்துள்ளார். நமது பருத்திவீரன் சரவணன் மகனை போலீஸ் கஞ்சாகேசில் உள்ளே தள்ளி கொலை செய்துவிடுகின்றனர்..அந்தக் கொலை குற்றங்களை செய்த போலீஸ் குடும்பங்களை விரட்டி விரட்டி கொல்கிறது ஒரு கேரக்டர். இது எங்கே போய் முடிகிறது என்பதே படத்தின் கதை
எதார்த்தம் மிகாமல் சிறப்பாக நடித்துள்ளார் நமது சரவணன். ராஜா மலைசாமியும் ஒகே ரகம் தான். நிஷா துபேய் இன்னும் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கலாம். காதல் சுகுமார் இந்தப்படத்தில் கேரக்டர் ஆர்டிஸ்ட்-ஆக கவனம் ஈர்த்துள்ளார். சுரேகா, ரோஜன் லியோன் உள்ளிட்ட இன்னபிற நடிகர்களும் சொன்னபடி ஒப்பேற்றியுள்ளனர். இன்னும் சிறப்பான நடிப்பை எல்லோரும் வழங்கியிருக்கலாம்.
ஜெயா கே தாஸ் பின்னணி இசையில் ஓரளவு சமாளித்துள்ளார். இசைவழியே இன்னும் நல்ல அனுபவத்தைத் தந்திருக்கலாம். ஒளிப்பதிவாளர் ஜெயகுமார் தங்கவேல் கிடைத்த பட்ஜெட்டில் கிடைத்த லைட்டிங்-ஐ வைத்து சமாளித்துள்ளார். அப்படியிருந்தும் பட்ஜெட் படம் என்பது துல்லியமாக தெரிந்துவிடுகிறது
கதையாக நல்ல ஐடியாவைப் பிடித்துள்ளார் இயக்குநர் பாலு. ஆனால் திரைக்கதையில் கோட்டைவிட்டுள்ளார். மேக்கிங் லெவலிலும் இன்னும் மெனக்கெட்டிருக்க வேண்டும்
இன்ட்ரெஸ்டிங்கான கதைக்காக வேண்டுமானால் ஒருமுறை பார்க்கலாம்
2.75/5
-வெண்பா தமிழ்

