சமூக அக்கறையுள்ள படம்!
ஒரு விபத்தின் பின்னணியைப் பற்றி விசாரிக்கிறார் ஹீரோ ஆதித்ய மாதவன். அதன் பின்னணியில் சில உண்மைகள் தெரிய வருகிறது. இன்னொரு புறம் டாக்டரான கெளரி கிஷன் தனது மருத்துவமனையில் நடக்கும் ஒரு க்ரைம் பற்றி கேள்வி கேட்கிறார். இந்த இரு கதைக்கருவும் ஓரிடத்தில் இணைகிறது. அதன்பின் நடக்கும் பரபர விசயங்கள் தான் படத்தின் மீதிக்கதை. கிரைம் திரில்லர் படம் என்பதால் இதுக்கு மேல் கம்பெனி கதையை விவரிக்காது
அறிமுக நாயகன் என்றால் எதோ சமாளித்திருப்பார் என்று நினைத்தால், காவல் அதிகாரியாக கலக்கியுள்ளார் ஹீரோ ஆதித்ய மாதவன். இன்னும் சிற்சில முன்னேற்றம் மட்டுமே அவர் நடிப்பில் தேவை. நாயகி கெளரி கிஷன் மருத்துவராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அஞ்சுகுரியன் தனக்கு வழங்கப்பட்ட கேரக்டரை உள்வாங்கி சிறப்புற நடித்துள்ளார். முனிஷ்காந்த் காமெடி பெரிதாக Ok ரகம். நண்டு ஜெகன் நடிப்பு படத்திற்கு வலு சேர்த்துள்ளது. படத்தில் நடிப்பால் ருத்ரதாண்டவம் ஆடியிருப்பது மூர் தான். இப்படியான கேரக்டர் அமைவது ரேர். அதைப் பயன்படுத்தி அசத்தியுள்ளார் மூர். வெல்டன் சேட்டா
கிரைம் திரில்லர் படத்திற்கு ஏற்ற பின்னணி இசையை வழங்கியுள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான். ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் தனது நல்ல நல்ல ப்ரேமிங்கால் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்
மிகவும் வித்தியாசமான நரேசனில் கதை சொல்லி கவனிக்க வைக்கிறார் இயக்குநர் அபின் ஹரிஹரன். இலக்கியத்தில் ஆண்பால் பெண்பால் பலவின்பால் என்பார்கள். அதிலுள்ள பலவின் பால் என்பதற்கு அதர்ஸ் என பெயரிட்டு ஒரு முக்கியமான விசயத்தைப் பேசியுள்ளார் இயக்குநர். திருநங்கைகள், திருநம்பிகளுக்கு ஆதரவான இந்தத் திரைக்குரல் மிக முக்கியமானது. கன்டென்ட்-ஆக அசத்திய இயக்குநர் படத்தை ஒரு நல்ல கமர்சியல் மெட்டிரியலாகவும் மாற்றத் தவறவில்லை. சமூகத்தில் அவ்வளவு எளிதில் யாரும் பேசாத விசயத்தை இயக்குநர் பேசியது மிகவும் பாராட்டுக்குரியது
அதர்பாலின ஒடுக்குமுறையை எதிர்த்து குரல் எழுப்பும் இப்படியான படங்களை வரவேற்க வேண்டியது நம் கடமை
3.5/5
-வெண்பா தமிழ்

