சினிமாவில் யாரும் செய்யத்துணியாத முயற்சிகளைச் செய்யும் இயக்குநர் மணிகண்டன். அப்படியான இயக்குநர்களுக்கு தோள்கொடுக்கும் நடிகர்களில் முக்கியமானவர் விஜய்சேதுபதி. இந்தக்கூட்டணி மீண்டும் ஒரு வெப்சீரிஸில் இணைந்திருப்பதால் எதிர்பார்ப்பு எகிறிக்கிடந்தது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா சீரிஸ்?
மதுரை அருகேயுள்ள கிராமம் ஒன்றில் மூடப்படும் நிலையிலுள்ளது ஒரு காவல் நிலையம். அங்கு சப் இன்ஸ்பெக்டராக இருக்கும் முத்துக்குமார் இதர காவலதிரிகளாக இருக்கும் கோடங்கி வடிவேல், சிங்கம்புலி. இவர்களில் சிங்கம்புலி ஸ்டேசன் மூடினால் நல்லது என நினைக்கிறார். வடிவேல் மூடக்கூடாது என வேண்டுகிறார். இச்சூழலில் இந்த ஸ்டேசன் டிவிசனில் ஒரு மனிதத்தலை தனியாக கிடைக்கிறது. இந்த ஒரு தலைக்காட்சி தான் ஹீரோ என்ட்ரி காட்சி!!! உடலற்ற தலையான விஜய்சேதுபதி யார் என்ற கேள்விக்கான விடையே சீரிஸின் மீதிக்கதை
கதையின் நாயகனான விஜய்சேதுபதி வழக்கம் போல் இயக்குநரிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்துள்ளார். ராபின்ஹுட் ஹீரோவாக வரும் இடங்களில் சுவராஸ்யம் கூட்டுகிறார். அபி நக்ஷத்ரா, ரிஷா இருவரும் கவனம் ஈர்க்கும்படி நடித்துள்ளனர். வி.ஜே பார்வதி கொடுத்த கேரக்டருக்கு நியாயம் செய்துள்ளார். கோடங்கி வடிவேல் ஏற்ற வேடத்திற்கு கச்சி தமாக பொருந்தியுள்ளார். முத்துக்குமார் கிடைக்கிற கேப்பில் கிடா வெட்டுகிறார். மேலும் சிங்கம்புலி, பாண்டியன், பாலாஜி சக்திவேல் என சீரிஸில் ஏகப்பட்ட கேரக்டர்ஸ்
மது, சண்முக சுந்தரம் என இரண்டு ஒளிப்பதிவாளர்கள். கச்சிதமான ப்ரேம்களால் அசரடித்துள்ளனர். ராஜேஷ் முருகேசன் இசை திரைக்கதை நகர்வுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுக்கிறது
இயக்குநர் மணிகண்டனோடு இணைந்து எடிட்டர் பி.அஜித்குமாரும் இந்த சீரிஸை இயக்கியுள்ளார். ஆரம்ப எபிசோட்கள் கொஞ்சம் பொறுமையைச் சோதிக்கவே செய்கின்றன. போகப்போக இன்ட்ரெஸ்டிங் எலிமெண்ட்ஸ் நிறைய வந்தடைவது ஆறுதல்! மணிகண்டன் விஜய்சேதுபதி மேஜிக் ஆங்காங்கே மிஸ் ஆனாலும் பெரிதாக சோர்வைத்தராத வகையில் இந்த வெப்சீரிஸை ஹாட்ஸ்டாரில் நீங்கள் துணிந்து அணுகலாம்
3.25/5
-வெண்பா தமிழ்

