மிடில் கிளாஸ்- விமர்சனம்

முதலில் தயாரிப்பாளர்கள் தேவ் மற்றும் கே.வி துரை இருவருக்கும் வாழ்த்துகள். மிடில் கிளாஸ் என்ற பெயரில் ஒரு பர்ஸ்ட் கிளாஸ் படத்தைத் தந்துள்ளனர்

ஒரு நடுத்தர குடும்பத்தஸ்னின், குடும்பத்தஸ்ரியின் மனநிலையும் வாழ்நிலையும் அதியற்புதமாக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கத்தின் எழுத்தில் வாய்த்துள்ளது. ரைட்டராக அட்டகாசமாக ஜெயித்துள்ளார் அவர்.

சென்னையில் சொந்த வீடு கனவோடு எப்படியாவது முன்னேறிவிட வேண்டும் என துடிக்கிறார் முனிஷ்காந்த் மனைவி விஜயலக்‌ஷ்மி. கணவனான முனிஷ்காந்த் மனம் முழுதும் சொந்த ஊரில் இருக்கிறது. ஆசைகள் எதையும் அடைய விடாத தேவைகள் கொண்டது மிடில் கிளாஸ் லைப். அதனால் முனிஷ்காந்த் குடும்பத்தில் எதாவது அதியசம் நிகழாதா என நம் மனது பிரார்த்திக்கொண்டே இருக்கிறது. முடிவில் அந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது என்பதே படத்தின் மீதிக்கதை

முனிஷ்காந்த் ஆகத்தரமான நடிப்பை கொடுத்துள்ளார். ஒரு நடுத்தர குடும்பத்தஸ்னுக்கு இருக்கும் எல்லா அம்சங்களும் அவரது உடல்மொழியில் சாத்தியப்பட்டுள்ளது. வாழ்த்துகள் முனிஷ்காந்த். இந்த வருடம் சில விருதுகள் கன்பார்ம். அநியாயத்திற்கு ஆச்சர்யம் அளித்துள்ளார் நாயகி விஜயலக்‌ஷ்மி. எதைச் செய்தால் பணம் வரும் என்று மனது நினைக்கிறதோ..உடனே அதைச் செய்து பார்க்கும் அவரின் கேரக்டர் ஆர்க் வேறலெவலில் வொர்க் ஆகியுள்ளது. ராதாரவி, ஆட்டோ டிரைவர், காளி வெங்கட், வேல.ராமமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு கேரக்டர்கள் படத்தில் அசத்தியுள்ளனர்.

ஒளிப்பதிவில் துளியும் எதார்த்தம் மீறாமல் கவனமாக ஷாட்களை கம்போஸ் செய்துள்ளார் சுதர்சன் சீனிவாசன். இசை பிரனவ் முனிராஜ். காட்சிகள் கோரி நிற்கும் எல்லா உணர்வுகளையும் இசைவழி நின்று நிரவியுள்ளார்.

தன் அப்பா சிவபுண்னியம் செய்த புண்ணியம் ஒன்று முனிஷ்காந்த் கைகளில் வந்து சேரும் பின்பாதியும் சரி, கலகலவென நகரும் முன்பாதியும் சரி பக்கா கமர்சியல் பேக்கேஜ். மனிதர்கள் பெருமளவு மறந்து போன அறத்தை மனதில் விதைக்கும் அந்தக் கிளாஸ்மாக்ஸ் காட்சி, சல்யூட் ரகம். உழைத்தால் வாழலாம்..உழைப்போடு உண்மையும் பிறன்நலனும் சேர்ந்தால் உயர்ந்து வாழலாம் என படமெடுத்து பாடமெடுத்துள்ளார் இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம்.

உங்களின் இந்த வார முதல் தேர்வாக மிடில் கிளாஸ் படம் இருக்கட்டும்

3.75/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *