லாக்டவுன்- விமர்சனம்

2020 லாக்டவுன் காலத்தில் ஒரு மிடில் கிளாஸ் பெண்ணுக்கு நடக்கும் அசம்பாவிதமும் தீர்வும் தான் படத்தின் ஒன்லைன்

நாயகி அனுபமா பரமேஸ்வரன் குடும்பச் சூழல் காரணமாக வேலை பெற்றே ஆக வேண்டும் என்று வேலை தேடி அலைகிறார். அப்படியான சந்தர்ப்பம் ஒன்றில் அவருக்கு யாரும் யூகித்திடாத அசம்பாவிதம் நடக்கிறது. அதைக் குடும்பத்திற்கு தெரியாமல் மறைக்கிறார். அந்த அசம்பாவிதம் என்ன? என்பதும், எதிர்பாராமல் வரும் லாக்டவுனால் அவருக்கு ஏற்படும் அடுத்தகட்ட பாதிப்பு என்ன? என்பதும் படத்தின் மீதிக்கதையாக விரிகிறது

ஒன்வொமன் ஆர்மியாக படத்தைத் தூக்கிச் சுமக்கிறார் அனுபமா பரமேஸ்வரன். கண்களில் குறும்புத் தனம் மின்னும் காட்சிகளிலும், அதன்பிற்கு சோகமே ததும்பும் காட்சிகளிலும் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சார்லி வழக்கம் போல ஸ்கோர் செய்கிறார். சர்ப்ரைஸாக நிரோஷோ எமோஷ்னல் காட்சிகளில் நம்மை உலுக்குகிறார். தோழியாக வரும் பிரியா வெங்கட் மனதில் நிற்கும்படியான கேரக்டரில் முத்திரைப்பதித்துள்ளார். இயக்குநர் ஏ.ஆர் ஜீவாவும் ஒரு கேரக்டரில் வருகிறார்

ரகுநந்தனின் இசை கதை போகும் போக்கிற்கேற்ப இசைத்துள்ளது. பாடல்களும் ஒகே ரகம். KA. சக்திவேலின் ஒளிப்பதிவு இயல்பாக ஈர்க்கிறது. நிறைய டூ ஷாட்ஸ், மிட் ஷாட்ஸ் வழியாகவே உணர்வுகளை கடத்தி விடுகிறார்

விபரம் அறியாமல் செய்யும் தவறு வேறு. தனக்குத் தவறு நடந்திருப்பதே தெரியாமல் ஒரு பெண் தவித்தால் நிலைமை என்னவாகும்? என்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைத்துள்ளார் AR.ஜீவா. படத்தின் ஆரம்பக்கட்ட காட்சிகள் சற்று லைட் வெயிட்டாகச் செல்கிறது. 30-ஆவது நிமிடத்தில் படம் வேகமெடுத்து நல்ல பாயிண்டில் இன்ட்ரெவல் வருகிறது. அதன்பிறகு நடக்கும் காட்சிகள் யூகிக்கக் கூடியதாகவும், வழக்கமான டெம்ளேட்டாகவும் இருக்கின்றன. கோவிட் காலத்தில் நாம் சந்தித்த பல நிகழ்வுகளை படம் கண்முன் காட்டியிருப்பது நம்மை லேசாக உலுக்குகிறது

இரண்டாம் பாதியை இன்னும் வலிமையாக படைத்திருக்கலாம்.

நிச்சயமாக பெரிய சோர்வைத் தராத படம் என்று உத்திரவாதம் தரலாம்
3/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *