பல்சர் பைக்கிலுள்ள அமானுஷ்யத்தை வைத்து காமெடி ரைட்-க்கு முயற்சித்துள்ளார் இயக்குநர் முரளி க்ரிஷ்
ஹீரோ தினேஷ் ஒரு குட்டி எக்ஸல் பைக்கில் ஆரோ வாட்டர் மிஷின் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். ஹீரோயினோடு அவருக்கு ஒரு காதல் போன் பேச்சு மூலமாக வருகிறது. ஹீரோயினிடம் தனக்கு பல்சர் பைக் இருப்பதாக தினேஷ் சொல்கிறார். உடனே ஹீரோயின், ‘அடுத்து நீ வந்தா பல்சரோட வா’ என்று சொல்ல, தினேஷ் பிரச்சனைக்குரிய ஒரு பல்சர் பைக்-ஐ வாங்குகிறார். அந்தப் பைக்கின் பின்கதை தான் படத்தின் மீதிக்கதையாக விரிகிறது
கொஞ்சமும் என்ர்ஜியின்றி திரையில் தோன்றியுள்ளார் தினேஷ். படத்தில் எங்குமே அவர் தனித்துத் தெரியவில்லை. ஹீரோயின்கள் இரண்டுபேர் வருகிறார்கள். யாருமே பெரிதாக சோபிக்கவில்லை. ப்ராங்க் ஸ்டார் ராகுல் காமெடி என ஏதேதோ முயற்சி செய்துள்ளார். நமக்குச் சிரிப்பு தான் வரமாட்டேன்கிறது. ப்ளாஸ்டிக் வில்லன் கேரக்டர் முதல் நார்மலான மன்சூர் அலிகான் கேரக்டர் வரை யாருமே படத்தைக் காப்பாற்றவில்லை. சரவண சுப்பையா மட்டும் சற்று கவனம் ஈர்க்கிறார்
பாஸ்கர் ஆறுமுகம் தனது ஒளிப்பதிவில் நிறைய சிக்கனத்தைக் கையாண்டுள்ளார். ஜல்லிக்கட்டுப் போட்டியை ஸ்டாக் ஷாட்ஸ் வைத்து ஒப்பேற்றியுள்ளார். இசையில் கொஞ்சமாக கவனம் ஈர்க்கிறார் இன்பா. சில இடங்களில் அதிக இரைச்சல் இருப்பதும் மறுப்பதற்கில்லை
பைக்கில் ஆவி என்ற கான்செப்ட்-ஐ வைத்து அசத்தலான படத்தைச் செய்திருக்க முடியும். ஆனால் இயக்குநர் படத்தைச் சீராக நகர்த்திக் கொண்டு போவதில் ரொம்பவே திணறியுள்ளார். மேலும் படத்தில் எல்லாக் காட்சிகளிலும் 90-கால சினிமாக்களின் சாயல்
இன்னும் கொஞ்சம் பெட்டராக ட்ரை செய்திருக்கலாம். இருந்தாலும் ஆங்காங்கே சில காட்சிகளில் இன்ட்ரெஸ்ட் எட்டிப்பார்க்கிறது
2.5/5
-வெண்பா தமிழ்

