“ஒரே நிலா..ஒரே சூரியன்.. ஒரே சூப்பர் ஸ்டார்” இந்த வார்த்தைகளை எத்தனை முறை சொன்னாலும் அங்கு பொருத்தமாக வந்து நிற்கும் முகம் ரஜினியின் முகம்
ஜெயிலர் படத்தில் ரஜினியால் மறைத்து வைக்கப்பட்ட மூன்று கண்டெய்னர் சிலைகளை தேடுகிறது எஸ்.ஜே சூர்யா கேங். கூடவே ரஜினியையும். ரஜினி மிகவும் சாந்தமாக நமோ நாராயணனிடம் டிரைவராக பணியாற்றுகிறார். எஸ்.ஜே சூர்யாவிற்கு கீழ் சுராஜ் வெஞ்சாரமூடு, அவருக்கு கீழ் தமிழ் என ரஜினியைத் தேடும் படலம் நடக்கிறது. ஆனால் ரஜினியும் அவர்களை நெருங்குவது தான் ஹைலட்! வில்லன்களை மீட் செய்யும் ரஜினி ரசிகர்களுக்கு மாஸ் ட்ரீட் வைப்பது தான் படத்தின் திரைக்கதை
ரஜினிகாந்தின் வயோதிகத்தை உணர்ந்து ஷாட்களும் காட்சிகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதை உணர்ந்து ரஜினியும் தூள் பரத்தியுள்ளார். வந்து நின்றாலே அதிர்கிறது திரை. ரஜினி மருமகளாக மிர்ணா எமோஷ்னல் ஏரியாவை தக்க வைக்கிறார். சுராஜ் வெஞ்சாரமூடு சீரியஸ் காட்சிகளில் செய்யும் காமெடி அதகளம். நமோ நாராயணன் நடிப்பு இந்தப்படத்தில் வேறலெவலில் வொர்க் ஆகியுள்ளது. யோகிபாபு அடிக்கும் பல பன்ச்கள் தரம். இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி மிரட்டலாக வருகிறார். வித்யாபாலன் கேரக்டர் வடிவமைக்கப்பட்ட விதம் அருமை. அவரின் நடிப்பும் செம்ம. எஸ்.ஜே சூர்யா வழக்கமான வில்லனாக வந்தாலும் அது ரஜினியோடு என்பதால் சிறப்பாக வொர்க் ஆகியுள்ளது
விஜய் கார்த்திக் கண்ணன் தரமான ஒளிப்பதிவை கொடுத்துள்ளார். எல்லாக் காட்சிகளின் விஷுவலும் பக்கா. அனிருத் சூப்பர் ஸ்டார் படமென்றால் எக்ஸ்ட்ரா எபெக்ட் உழைப்பார் அல்லவா? அந்த உழைப்பு ஆன் ஸ்கிரீனில் வேறலெவலில் தெரிகிறது
ரொம்ப சிம்பிளாக ஒரு மலையாளப் படம் போல துவங்கும் படம், போகப்போக பீக்-கிற்கு செல்கிறது. குறிப்பாக இண்டெர்வெல் ப்ளாக்லாம் தரமான சம்பவம். நெல்சனின் ஒன்லைன்…இல்ல Funலைன்ஸ் எல்லாம் ப்ளாஸ்டு ப்ளாஸ்டு! நிச்சயமாக தியேட்டரில் போய் கொண்டாட வேண்டிய படம்
ஜெயிலர்2- எடுத்து வைங்க 1000 கோடியை!
4/5
-வெண்பா தமிழ்

